tamilnadu

நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தலாம் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக் கூடாது!

நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தலாம் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக் கூடாது!

மதுரை, அக். 10 - திருப்பரங்குன்றம் மலை தொடர் பான வழக்கில், ஆடு, கோழி பலி யிடத் தடை விதித்து நீதிபதி ஸ்ரீமதி  பிறப்பித்த உத்தரவை உறுதிப் படுத்தி, மூன்றாவது நீதிபதி ஆர். விஜயகுமார் தீர்ப்பளித்துள்ளார். மேலும், நெல்லித்தோப்புப் பகுதி யில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் அவர் உறுதிப்படுத்தினார்.  திருப்பரங்குன்றம் மலை தொடர் பான வழக்குகளை, நீதிபதிகள் ஜெ. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி அமர்வு விசாரித்து, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். நீதிபதி ஜெ. நிஷா பானு, “திருப்ப ரங்குன்றத்தில் அமைதி நிலவ வேண்டும். மதநல்லிணக்கம் காப்பா ற்றப்பட வேண்டும். இதை சீர்குலைக்க நினைக்கும் நபர்கள், அமைப்புகள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு, ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்கக் கோருவது உள்ளிட்ட 5 மனுக் களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். அதே சமயம் நீதிபதி ஸ்ரீமதி, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வேண்டும், நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்க தடை விதிக்க வேண்டும் என்ற சோலை கண்ணன், ராமலிங்கம், பரமசிவம் ஆகிய இந்துத் துவா அமைப்பினர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக்கொண்டார். திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கவும், தர்காவுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக சாலை, மின்விளக்கு, குடிநீர், கழிப்ப றை வசதி செய்யக் கோரிய மனுக்க ளையும் தள்ளுபடி செய்தார்.  தர்காவில் புனரமைப்புப் பணி கள் மேற்கொள்ள தொல்லியல் துறை யிடம் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவுடன், தர்கா நிர்வாகத்தின் மனு முடித்து வைக்கப்பட்டது. இதனால், இந்த வழக்கில் முடி வெடுக்க, வழக்கு மூன்றாவது நீதிபதி ஆர். விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த இரண்டு மாத ங்களாக தனி நீதிபதி தனது விசார ணையைத் தொடர்ந்து நடத்தினார். அதன்முடியில், ஆடு, கோழி பலி யிட தடை விதித்தும், இதுகுறித்து சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்ற நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்தினார்.