tamilnadu

img

அபாகஸ் உலக சாம்பியனுக்கு பாராட்டு

அபாகஸ் உலக சாம்பியனுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி, ஆக. 4 - அபாகஸ் போட்டியில் உலக அளவில் பதக்கம் வென்ற மாணவருக்கு தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தியைப் பார்த்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை நகரம் அன்பையா பேரனும், பொறியாளர் சிவக்குமார், தம்பி இந்திரகுமார்-கோதைநாயகி ஆகியோரின் மகன் சரபேஷ் விக்ரமன் உலக அளவிலான அபாகஸ் போட்டி மங்கோலியன் நாட்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உளுந்தூர்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். இதில் வாலிபர் சங்க மாநில இணைச் செயலாளர் செல்வ ராஜ், மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி, மாணவர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் தோழர் பி.சின்னராசு, மாவட்டத் தலைவர் ஜெ.டார்வின், வாலிபர் சங்க நகர தலைவர் எம்.தீபன், எஸ்எஃப்ஐ மு.மாவட்டச் செயலாளர் கே.வி.ஸ்ரீபத், நகர செயலாளர் ஜோ.நிர்மல்ராஜ் உள்ளிட்ட  பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.