tamilnadu

img

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் வாங்கிக் கொடுத்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டு

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க  இடம் வாங்கிக் கொடுத்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டு

அரியலூர், ஜூலை 4 - ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு இடம் வாங்கிக் கொடுத்த முன்னாள் ஊராட்சி  மன்றத் தலைவரை கிராம மக்கள் பாராட்டி  வருகின்றனர். அரியலூர் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள பெரியாத்துக்குறிச்சி கிராமம் மற்றும்  அதன் சுற்றுவட்டார கிராமங்கள் என சுமார்  5000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதி முழுவதும் வயல் மற்றும் காடுகள் நிறைந்த பகுதியாக உள்ளதால் விஷக்கடி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை பெறுவதற்காக 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விருத்தாசலம், ஸ்ரீ முஷ்ணம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய  நிலை இருந்தது. இதனால் உயிர் பலிகளும்  ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்களித்த மக்க ளுக்கு மருத்துவ சேவையை வழங்கும் வகையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வராக இருந்த பாவா டைராயர், தனது வீட்டை விற்று இரண்டு நண்பர்களின் உதவியுடன் அதே கிராமத்தில் 56 செண்ட்  இடத்தை ரூ.13 லட்சத்திற்கு வாங்கி, அந்த இடத்தில் ஆண்டிமடம் ஊராட்சி சார்பில் அரசு ஆரம்ப  சுகாதார நிலையம் கட்ட அரசுக்கு விண்ணப் பித்தார். இதனையடுத்து ரூ.ஒரு கோடியே 20  லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலைய  கட்டிட பணிகள் முடிவடைந்தது. இதனை  வியாழனன்று காணொலி மூலம் தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவையினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட இடம்  வாங்கிக் கொடுத்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.