tamilnadu

img

மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் செயல்

மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் செயல்

பதவி நீக்க மசோதாவுக்கு முதல்வர் கண்டனம்

சென்னை, ஆக. 20 - முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரை பதவியில் இருந்து நீக்கும் 130-ஆவது அரசிய லமைப்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்ட னத்தை தெரிவித்துள்ளார். “130-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்  என்பது சீர்திருத்தம் அல்ல, இது ஒரு கருப்பு  நாள், இது ஒரு கொடுஞ்சட்டம். 30 நாள்  கைது செய்யப்பட்டால், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதலமைச்சரை எந்த விசாரணையும், நீதி மன்றத் தண்டனையும் இல்லாமலேயே பதவி நீக்கம் செய்யலாம் என்கிறது இந்த சட்டம்.” “வாக்குகளைத் திருடு, எதிராளிகளின் குரலை  நசுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒடுக்கு -  எல்லா கொடுங்கோன்மையும் இப்படித்தான் தொடங்கும். மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர்  ஊற்றும் இத்தகைய திருத்தச் சட்டத்தை நான்  வன்மையாக கண்டிக்கிறேன்” என்று முதல மைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த சட்ட முன்வரைவின் நோக்கம் மிகத் தெளிவானது. பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள தனது அரசியல் எதிரிகளின் மீது  பொய் வழக்குகளைப் புனைந்து, எந்த விசார ணையும் தீர்ப்பும் இன்றியே 30 நாட்கள் கைது  செய்யப்பட்டிருந்தாலே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவரைப் பதவிநீக்கம் செய்யலாம் எனும்  வகையில் பாஜக இதை கொண்டு வந்துள்ளது. இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற முயலும்  இந்த முயற்சிக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும்” என்றும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு  விடுத்துள்ளார்.