பூலித்தேவன் பிறந்தநாள்: முதலமைச்சர் வாழ்த்து
சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “அந்நியர் ஆதிக்க எதிர்ப்பின் பெருமைமிகு தமிழ் அடை யாளமான பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாள்! சிப்பாய்ப் புரட்சிக்கும் நூறாண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் புரட்சி வெடித்துவிட்டது! தென்னகம் அந்நியருக்குப் பட்டா போட்டு தரப்படவில்லை எனப் பறைசாற்றும் விதமாகப் போரிட்டு, இந்திய விடுதலைப் போராட்டத்துக்கான தொடக்க வுரை எழுதிய பூலித்தேவரின் புகழ் போற்றுகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கை எடுக்க உத்தரவு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணிக்கு எதிரான நிதி முறைகேடு புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறியது. அரசியல் வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது? என கேள்வி எழுப்பிய நீதி மன்றம், “முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறை கேடு புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு
சென்னை: வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கக் கூடும் என்றும் இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் செப்டம்பர் 7 வரை, மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்ப தாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக் கிறது.
செப். 7-இல் முழு சந்திர கிரகணம்!
சென்னை: 2025-ஆம் ஆண்டின் முழு சந்திர கிர கணம் செப்டம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி இரவு 9.56 மணியளவில் தொடங்குகிறது. முழு சந்திர கிர கணம் இரவு 10.59 மணியளவில் தொடங்கி, நள்ளிரவு 12.23 மணி வரை நீடித்து, கிரகணம் முழுவதுமாக நள்ளிரவு 1.26 மணிக்கு நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவுகள் எச்சரிக்கையாக இருக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை: விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவு களை பின்பற்றுவதில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் மாநக ராட்சி அதிகாரிகளை எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பி.தாமஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும், வெவ்வேறு கார ணங்களை கூறி அவற்றை நிறைவேற்ற தவறியதாக சென்னை மாநகராட்சி ஆணையர், கோடம்பாக்கம் மண்டலத் திற்குட்பட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் ஆஜராக உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜரான அதிகாரிகள், சூசன் ஜான் என்ப வருக்கு சொந்தமான கட்டிடத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி பூட்டி சீல் வைத்துவிட்டதாக கூறியதுடன், தாமதமாக நடவ டிக்கை எடுத்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பையும் கோரினர். தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவத்ஸவா, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆக்கிர மிப்பாளருக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாகவும், செய லற்றும் இருந்துள்ளதாக அதிருப்தி தெரிவித்தது. தங்கள் தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி யதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், தாமதமா னாலும் விதிமீறல் கட்டிடத்தை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளதால், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தர வையும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். அதேசமயம், விதிமீறல் கட்டிடங்கள் தொ டர்பாக நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
என்டிஏ கூட்டணியிலிருந்து விலகல்?
சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம், டி.டி. தின கரன் இருவரும் பாஜக வுடன் இணைந்து போட்டி யிட்டனர். தற்போது, அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளதால் ஓ. பன்னீர்செல்வத்தை பாஜக சீண்டவில்லை. இத னால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓ. பன்னீர்செல்வம். இந் நிலையில், சட்டப்பே ரவைத் தேர்தலில் யாரு டன் கூட்டணி என்பதை வருகிற டிசம்பரில் அறி விப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழ கத்தின் பொதுச் செயலா ளர் டி.டி.வி.தினகரன் அறிவித்திருக்கிறார். இத னால் அவரும் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறப்படு கிறது.
விமான நிலையத்திற்கு இடம் தேர்வு
சென்னை: இராம நாதபுரம் மாவட்டத்தில் புதிதாக விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, விமான நிலையம் அமைக்க ‘கீழக்கரை, உச்சிப்புளி’ ஆகிய இரண்டு இடங் கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன என்றும், இந்த விமான நிலையத் திற்கு 500 முதல் 600 ஏக்கர் நிலம் போதுமானது என்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ)
சனாதன ஒழிப்பு பேச்சு விவகாரம் உதயநிதி ஸ்டாலின் மனு மீது 2026 பிப்ரவரியில் விசாரணை
புதுதில்லி, செப்.1 - தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய கோரியும், வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும் தமிழக துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டா லின் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த மனுவை திங்களன்று விசாரித்த உச்ச நீதி மன்றம், விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ர வரி மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.