tamilnadu

img

பொன்னமராவதி: அங்கன்வாடி ஊழியர்கள் அகில இந்திய கருப்பு தின போராட்டம்

பொன்னமராவதி:  அங்கன்வாடி ஊழியர்கள்  அகில இந்திய கருப்பு தின போராட்டம்

பொன்னமராவதி, ஆக. 21-  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், அகில இந்திய கருப்பு தினம் போராட்டம் நடைபெற்றது.  பொன்னமராவதி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சந்திரா தலைமை வகித்தார். சங்க வட்டார துணைத் தலைவர் பாண்டிச் செல்வி, செயலாளர் மலர்கொடி, பொருளாளர் சரஸ்வதி உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.  போராட்டத்தில், மையப் பணிகளை செய்வதற்கு 5ஜி செல் போன், 5ஜி சிம் கார்டு, அந்தந்த கிராமத்தின் நெட்வொர்க்குக்கு ஏற்ப சிம் கார்டுகளை வழங்கி அங்கன்வாடி மையத்திற்கு வைபை இணைப்பும் வழங்க வேண்டும், ஒடிபி, ஈகேஒய்சி, ஆதார் எண் ஒடிபி மற்றும் எஃப்ஆர்எஸ் முறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.