tamilnadu

img

விவசாயிகளை சந்திக்கச் சென்ற சிபிஎம் எம்எல்ஏக்களை தடுத்து நிறுத்திய போலீஸ்

கடலூர், ஆக.1- என்எல்சி விவகாரத்தில் விவசாயிகளை சந்திக்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏக்களை சேத்தியா தோப்பில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். என்எல்சி நிறுவனம் நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் அமைக்கும் இடமான வளையமாதேவி கிராமத்தில் உள்ள விவ சாயிகளை சந்திக்க  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் எம்எல்ஏக்கள் ஆகஸ்ட் 1  செவ்வாயன்று சென்றனர். கட்சியின் சட்ட மன்றக்குழு தலைவர் நாகை மாலி, கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை ஆகியோரை சேத்தியாத் தோப்பு குறுக்கு ரோட்டில் காவல்துறை யினர் தடுத்து நிறுத்தினர். அப்பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர். சாலைகளில் தடுப்பு அரண் களை வைத்து தடுத்த நிறுத்தியதால் எம்எல்ஏக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைக் கண்டித்து அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராமச்சந்திரன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி,  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சரவணன், மாவட்ட துணைத் தலைவர் தட்சிணா மூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பிரகாஷ், புவன கிரி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, குறிஞ்சிப்பாடி ஒன்றிய செய லாளர் தண்டபாணி, மாவட்டக்குழு உறுப் பினர்கள் கலைச்செல்வன், ராஜ், சிவ காமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.