tamilnadu

img

வன்கொடுமை சம்பவத்தில் வழக்குப்பதிய மறுக்கும் காவல்துறை

வன்கொடுமை சம்பவத்தில் வழக்குப்பதிய மறுக்கும் காவல்துறை

நாமக்கல், ஆக.24- பட்டியலின மக்களுக்கு எதி ரான வன்கொடுமை சம்பவத்தில் வழக்குப்பதிய மறுக்கும் காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் நாமக்கல் மாவட்ட  4 ஆவது மாநாடு, நாமகிரிப்பேட்டை  சித்தி விநாயகர் கோவில் திருமண மண்டபத்தில், தோழர் யு.கே.சிவ ஞானம் நினைவரங்கத்தில் சனி யன்று நடைபெற்றது. அமைப் பின் மாவட்டத் தலைவர் பி.செல் வராஜ் மற்றும் எம்.செல்வராணி, இ. ராஜேந்திரன் ஆகியோர் தலைமை  வகித்தனர். முன்னதாக, மாமேதை  காரல் மார்க்ஸ், சட்டமேதை அம் பேத்கர், தந்தை பெரியார் ஆகி யோர் படங்களை ஏந்திவாறு பேரணி நடைபெற்றது. விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டச்  செயலாளர் வி.பி.சபாபதி வரவேற் றார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட உதவித்தலைவர் எம்.கணேஷ்பாண்டியன் வாசித்தார். மாநில உதவிச்செயலாளர் சி.கே.கனகராஜ், மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட் டச் செயலாளர் கே.தங்கமணி அறிக்கையை முன்வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ. ஆதிநாராயணன், மாணவர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன், ஆதித்தமிழர் மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் கோபி, தமிழ் புலிகள் கட்சி கிழக்கு மாவட் டச் செயலாளர் வினோத் சேகு வாரா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். சாதிவாரி கணக் கெடுப்பை உடனடியாக துவங்கி நேர்மையான முறையில் நடத்த வேண்டும். தனியார் துறையில் கல்வி - வேலை வாய்ப்புகளில் இட  ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற  வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும். மனிதக்கழிவு களை அகற்றிட இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவத்தில், வழக் குப்பதிவு செய்ய மறுக்கும் போக்கை காவல் துறை கைவிட  வேண்டும். தூய்மைப் பணியாளர் களுக்கு சட்டப்படியான கூலி  வழங்க வேண்டும். தூய்மைப்  பணியை தனியார்மயமாக்கக் கூடாது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, அமைப் பின் நாமக்கல் மாவட்டத் தலைவ ராக பி.செல்வராஜ், செயலாள ராக கே.தங்கமணி, பொருளாள ராக சண்முகம், துணைத்தலைவர் களாக எம்.கணேஷ் பாண்டியன், கு. சிவராஜ், ஜி.பழனியம்மாள், துணைச்செயலாளர்களாக ஏ.டி.கண்ணன், கே.சின்னசாமி, ஆர். சந்திரமதி உட்பட 29 பேர் கொண்ட  மாவட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது. அமைப்பின் மாநில உத வித்தலைவர் பி.பழனிச்சாமி நிறை வுரையாற்றினார்.