tamilnadu

img

விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு வேலை தராமல் வெளியூர் ஆட்களை வைத்து விதை தெளிப்பு செய்வதா?

மயிலாடுதுறை, ஜூன் 27- ஆண்டாண்டு காலமாக விவசாய நிலங்களில் வேலை செய்து வந்த கூலித்  தொழிலாளர்களுக்கு வேலை தராமல், வெளியூர் ஆட்களை வைத்து நேரடி விதை தெளிப்பு செய்யப்பட்டது. இதற்கு  எதிர்ப்பு தெரிவித்த கூலித் தொழிலா ளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது காவல்துறையினர் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்  ஒன்றியம் பருத்திக்குடி கிராமத்தில் கீழப்  பருத்திக்குடி, வடக்குத்தெரு பகுதி களில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட விவ சாயக் கூலித் தொழிலாளர்கள், அக்கிரா மத்திலுள்ள நிலங்களில் விவசாய பணி கள் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளதால், பருத்திக்குடி கிராமத்திலுள்ள நிலங்களில் வெளியூர் ஆட்களை வைத்து நேரடி விதை தெளிப்பு  பாசனம் செய்வதற்கு அதிகாரிகள் துணையுடன் நில உடைமையாளர்கள் தயாராக இருந்துள்ளனர். 

இதை அறிந்த கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்  தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை யில் விவசாயக் கூலி தொழிலாளர்கள் பணி செய்வதற்கு தயாராக உள்ள போது, வெளியூர் ஆட்களை அனுமதிக் கக் கூடாது என வலியுறுத்தினர். இந்நிலையில் திங்களன்று காலை 500-க்கும் மேற்பட்ட காவல்படை, போலீஸ் வாகனங்கள் மற்றும் வெளி யூர் அடியாட்களுடன் அதிகாரிகள் நேரடி விதை தெளிப்பு பாசனம் செய்ய முயன்ற னர். இதனால் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி. ஸ்டாலின் தலைமையில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், குத்தா லம் ஒன்றியச் செயலாளர் சி.விஜய காந்த், பாஸ்கரன், ராமகுரு உள்ளிட் டோர் பணி நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.  அப்போது, சிபிஎம் தலைவர்கள் மீதும் கூலித் தொழிலாளர்கள் மீதும்  காவல்துறையினர் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த வர்களை கைது செய்து, அருகிலுள்ள ஸ்ரீகண்டபுரம் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துவிட்டு, ட்ரோன் மூல மாகவும், வெளியூர் ஆட்களைக் கொண்  டும் நேரடி விதை தெளிப்பு பாசனத்தை மேற்கொண்டனர்.  விவசாயப் பணிகளை மட்டுமே நம்பி யுள்ள அன்றாட கூலித் தொழிலாளர்கள் பணி செய்ய தயாராக இருந்தும், சாதிய பாகுபாட்டை கடைபிடிக்கும் நோக்கத் தோடு, வெளியூர் ஆட்களை கொண்டு  விவசாயப் பணிகளை மேற்கொள்ள நில உடைமையாளர்களுக்கு ஆதர வாக அரசு அதிகாரிகளும், காவல்துறை யினரும் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ள னர்.

கூலித் தொழிலாளர்கள் மீதும், மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் பி.சீனிவாசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் ஜி.ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், ஒன்றியச் செயலாளர் சி.விஜயகாந்த், கிளை உறுப்பினர் யுவராஜ் உள்ளிட்டோர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்  திய சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின்  மயிலாடுதுறை மாவட்டக் குழு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மாவட்டம் முழுவதும்  சாலை மறியல்

வெளியூர் ஆட்களை வைத்து நேரடி  விதை தெளிப்பு மூலம் பாசனம் செய்  ததை எதிர்த்து போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள், கூலித் தொழி லாளர்கள் மீது காட்டுமிராண்டித்தன மாக தாக்குதல் நடத்திய மயிலாடுதுறை காவல்துறையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட தலைவர்களையும், கூலித் தொழிலாளர்களையும் விடுதலை செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டம் முழுவ தும் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி.சிங்காரவேலன் தலைமையிலும், தரங்கம்பாடி ஒன்றியம் திருக்கடை யூரில் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்தி ரன் தலைமையிலும், செம்பனார் கோவில் ஒன்றியம் ஆக்கூரில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமை யிலும், சீர்காழி ஒன்றியம் வைத்தீஸ்வ ரன்கோவிலில் ஒன்றியச் செயலாளர் அசோகன் தலைமையிலும், கொள்ளி டத்தில் ஒன்றியச் செயலாளர் கேசவன் தலைமையிலும் சாலை மறியல் போராட்  டங்கள் நடைபெற்றது. மறியலில் ஈடு பட்ட அனைவரையும் காவல்துறை யினர் கைது செய்தனர்.

 

;