பிரதமர் மோடி - சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சந்திப்பு
இந்தியா-சீனா உறவுகளில் புதிய அத்தியாயம்
தியான்ஜின், ஆக. 31- சீனாவின் தியான்ஜின் நகரில் ஞாயிறன்று துவங்கியுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இருதரப்பு உறவுகளை மறுவடிவமைக்க விரிவான பேச்சு வார்த்தைகளை நடத்தினர். இது கடந்த பத்து மாதங் களில் இரு தலைவர்களின் முதல் சந்திப்பாகும். “பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்வு பூர்வமான அணுகுமுறையின் அடிப்படையில் நமது உறவுகளை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் உறுதியளிக்கிறோம்,” என பிரதமர் மோடி சீன ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
இந்த உறவுகள் இரு நாட்டின் 280 கோடி மக்களின் நலனுடன் நேரடி யாக தொடர்புடையது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எல்லைப் பிரச்சனையில் நேர்மறையான முன்னேற்றம் கடந்த ஆண்டு நடைபெற்ற இராணுவ நட வடிக்கைகளுக்குப் பின்னர் எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். எல்லைப் பிரச்சினைக்கு நியாய மான, பகுத்தறிவுபூர்வமான மற்றும் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காண இரு தலைவர் களும் உறுதியளித்தனர். ‘டிராகனும் யானையும் ஒன்றாக வேண்டும்’ “உலகம் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சீனாவும் இந்தியாவும் மிகவும் பழமையான நாகரிக நாடுகள். நாங்கள் உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகள் மற்றும் உலகின் தெற்கு பகுதியின் முக்கியமான உறுப்பினர்கள். நண்பர்களாக இருப்பது, நல்ல அண்டை நாடுகளாக இருப்பது முக்கியம். டிராக னும் யானையும் ஒன்றாக வர வேண்டும்” என சீனஜனாதிபதி ஜி ஜின்பிங் உருக்கமாக தெரிவித்தார்.
இரு தலைவர்களும் உலக வர்த்தகத்தை ஸ்திரப்படுத்துவதில் தங்கள் பொருளாதாரங் களின் பங்கை அங்கீகரித்தனர். வர்த்தக உறவு களை விரிவுபடுத்துவதற்கும் வர்த்தகப் பற்றாக்கு றையை குறைப்பதற்கும் அரசியல் மற்றும் நீண்ட கால உறவு எனும் நோக்கில் செயல்பட வேண்டிய தன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். இரு நாடுகளுக்கிடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதாகவும், விசா வழங்கும் செயல்முறைகள் எளிமைப்படுத்த ப்படுவதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார். இது மக்களுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்த உதவும் என இரு தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். பலதரப்பு அமைப்புகளில் ஒத்துழைப்பு இரு நாடுகளும் மூன்றாம் நாட்டின் கண்ணோ ட்டத்தில் தங்கள் உறவுகளை பார்க்காமல், சுயேச் சையையும் சுதந்திரத்தையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். பல்துருவ உலகம் மற்றும் சர்வதேச அமைப்புகளில் அதிக ஜனநாயகத்திற்கு இரு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
என சீன ஜனாதிபதி கூறினார். பிரதமர் மோடி, 2026ல் இந்தியா நடத்த விருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு சீன ஜனாதி பதி ஜி ஜின்பிங்கை அழைத்தார். பயங்கரவாதம் போன்ற பொதுவான சவால்களை எதிர்கொள்ள இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் பொதுவான அடித்தளத்தை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த சந்திப்பு, சீனா-இந்தியா இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 75வது ஆண்டில் நடை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளும் தங்கள் உறவுகளை மிகுந்த முக்கியத்துவத்து டனும் மற்றும் நீண்டகால பார்வையிலும் கையாள வேண்டும் என்பதில் உடன்பாடு கண்டனர்.