tamilnadu

img

பத்தனம்திட்டாவில் பரப்புரையை துவங்கினார் பினராயி விஜயன்!

பத்தனம்திட்டாவில் பரப்புரையை துவங்கினார் பினராயி விஜயன்!

திருவனந்தபுரம், மார்ச் 23 - கேரளத்தில் வேட்புமனுத் தாக்கல் திங்களன்று நிறைவடைந்த நிலையில், இடது ஜனநாயக முன்ன ணிக்கு (எல்டிஎப்) தலைமை வகிக்கும் முதலமைச்சர் பினராயி விஜயன் தமது 12 நாள் தேர்தல் பரப்பு ரையை திங்களன்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் தொடங்கினார். திருவல்லாவில் காலை 10.30 மணிக்கு முதல்வர் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். ஆரன் முளா, ரான்னி, கோன்னியில் நடந்த பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் உரையாற்றினார்.  வளர்ச்சியையும் மக்கள் நலத் திட்டங்களையும் மையமாகக் கொண்டு புதிய கேரளத்தை உரு வாக்கும் நோக்கத்துடன் இடது ஜனநாயக முன்னணி கேரள சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. அந்த வகையில், கடந்த பத்தாண்டு களாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைத் தொடர்வதற்கான வாய்ப்பை மீண்டும் வழங்குமாறு, பிரச்சாரத்தின் போது, கேரள வாக்காளர்களை முதலமைச்சர் பின ராயி விஜயன் கேட்டுக் கொண்டார். இரண்டாவது நாளாக, செவ்வா யன்று இடுக்கி மாவட்டத்தில் இடுக்கி, தேவிகுளம், உடும்பன் சோலை, பீருமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பினராயி விஜயன் பேசுகிறார். மார்ச் 25 அன்று கோட்டயம், மார்ச்  26 எர்ணாகுளம், மார்ச் 27 திருச்சூர், மார்ச் 28 பாலக்காடு, 29 மலப்புரம், 30 கொல்லம், 31 திருவனந்தபுரம், மே 1 அன்று ஆலப்புழா, மே 2   கோழிக்கோடு, மே 3 அன்று கண் ணூர் ஆகிய மாவட்டங்களில் பின ராயி விஜயன் பிரச்சாரம் செய் கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் ஏ. விஜயராக வன், விஜு கிருஷ்ணன், மரியம் தாவ்லே, மூத்த தலைவர்கள் பிர காஷ் காரத், பிருந்தா காரத், சுபா ஷினி அலி மற்றும் பலரும் கேர ளத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.