tamilnadu

img

வாழ்த்துச் செய்தி - பினராயி விஜயன் ,முதலமைச்சர், கேரள அரசு

தீக்கதிர் தமிழ் நாளிதழ் தனது 60 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடு வதை அறிந்தும், இதன்பொருட்டு ஒரு சிறப்பு மலர் வெளியிடுவதை அறிந்தும் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

தீக்கதிர் எப்போதும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்து பிரிவு மக்களின் போராட்டங்களை பிரதானப்படுத்துவதிலும், அதன் மூலமாக அவர்களுக்கு நீதியை உறுதி செய்வதிலும் முன்வரிசையில் நிற்கிறது. எதிர்வரும் காலத்திலும், நீங்கள் முற்போக்கு கருத்துக்களை பாதுகாக்கவும், வர்க்க மற்றும் வெகுஜன போராட்டங்களின் நோக்கங்களை முன்னெடுத்து செல்வதில் முன்னோடியாக திகழ்வதிலும் உறுதியாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அத்தகைய உங்களது தலையீடுகள் மேலும் வலுவடைய 60 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நிச்சயம் உதவும்.

எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

;