ஜூலை 9 வேலை நிறுத்தத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் பங்கேற்பு
திருச்சிராப்பள்ளி, ஜூலை 2 - உயிர் காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும். 8 மணி நேர வேலையை மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு உத்தரவாதப்படுத்த வேண்டும். குறைந்த பட்ச சம்பளம் ரூ.26000 வழங்கிட வேண்டும். தொழிலாளர் சட்டத்திருத்த தொகுப்பை திரும்பப் பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட 17 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 9 அன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தம், மறியலில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க உறுப்பினர்கள் முழுமை யாக பங்கேற்பது குறித்த தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதி நிதிகள் சங்கம் சார்பில் திருச்சியில் நடந்த பிரச்சாரத்திற்கு சங்கத் தலைவர் இனியன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சங்க செயலாளர் பாக்கிய ராஜ், சங்க மாநிலக்குழு உறுப்பினர் முரளி, சாலை போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் சந்திரன், மாவட்டக் குழு உறுப்பி னர் சார்லஸ், உறையூர் நடராஜன் ஆகி யோர் பேசினர். முன்னதாக பொதுமக்களிடம் கோரிக்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. சங்க பொருளாளர் ரகு நன்றி கூறினார்.