tamilnadu

img

அரியலூர் மாவட்டத்தில் மனு விசாரணை முகாம்

அரியலூர் மாவட்டத்தில்  மனு விசாரணை முகாம்

அரியலூர், செப். 28- அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில், காவல்துறை சார்பில் மனு விசாரணை முகாம்கள் நடைபெற்றன.  காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள சிறு வழக்கு மனுக்களை விரைந்து முடிக்கும் பொருட்டு நடைபெற்ற முகாம்களில், அந்தந்த காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் தலைமை வகித்து, மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டும், பொதுமக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். இதில், திருமானூரில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்த்ரி, பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று, அம்மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார். இம்முகாமுக்கு காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமை வகித்தார். இதேபோல் குவாகம் காவல்நிலையத்தில் நடைபெற்ற முகாமுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரனும், தா.பழூரில் நடைபெற்ற முகாமுக்கு ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சக்கரவர்த்தி ஆகியோர் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனர்.