கல்லறை தோட்டத்திற்கு நிலம் கேட்டு மனு
ஈரோடு, ஜுலை 14- கபர்ஸ்தான் மற்றும் கல்லறை தோட்டம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யக் கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவி னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஈரோடு சுற்றுவட்டாரத்தில் இறந்தவர் களை அடக்கம் செய்வதற்கு சிறுபான்மை மக் கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார் கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரு வாய் கோட்டாட்சியர் சித்தோடு பகுதியில் இருக்கும் நிலத்தை கொடுப்பதாக உறுதி யளித்திருந்தார். தொடர்ச்சியாக அதனைக் கேட்டுப் பெறுவதில் சுணக்கம் இருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் நாடு சிறுபான்மையின ஆணையர் சிறு பான்மை மக்களை நேரில் சந்தித்து குறை களைக் கேட்டார். அப்போது இக்கோ ரிக்கை எழுந்தது. நிலம் இருந்தால் கொடுக் கலாம் என ஆணையர் தெரிவித்தார். சூரியம் பாளையம் கிராமத்தில் அரசுக்கு சொந்த மான நிலம் 34.5 ஏக்கர் இருக்கிறது. அதில் கபர்ஸ்தான் மற்றும் கல்லறைத் தோட்டத் திற்கு தலா 5 ஏக்கர் வீதம் வழங்கினால் உதவி யாக இருக்கும் என்று மாவட்ட வருவாய் அலு வலரிடம் சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் செயலாளர் ப.மாரிமுத்து தலைமை யில் மனு அளித்தனர்.