tamilnadu

img

தோழர் பி.சீனிவாசராவ் நினைவுதினம் செல்லம்பட்டி அருகே தலித் மக்கள் நடைபாதைக்கான இட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு அளிப்பு

தோழர் பி.சீனிவாசராவ் நினைவுதினம் செல்லம்பட்டி அருகே தலித் மக்கள் நடைபாதைக்கான  இட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு அளிப்பு

மதுரை, செப்.30- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் கிராமத்தில் சுமார்  40க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்  கள் வசித்து வருகின்றனர்.  தற்போது தமிழக அரசு கலை ஞரின் கனவுத் திட்டத்தின் கீழ் நவீன  வசதிகளுடன் கூடிய 30 குடி யிருப்புகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடத்தும் நிலையில் உள்ளது. ஆனால் மெயின் ரோட்டில் இரு ந்து அவர்களின் குடியிருப்பு பகு திக்கு செல்வதற்கு 3 அடி அகலம்  கொண்ட ஒரு பாதை ஆக்கிரமிப்பு டன் உள்ளது. தற்போது வரை அவர்கள் தெரு வாக பயன்படுத்தி வந்த இடம்,  தற்போது அரசு பள்ளி கட்டிடமாக  மாற்றப்பட்டுள்ளதால் அவர்களின்  குடியிருப்பு பகுதிக்கு பாதை இல் லாத நிலை உருவாகியுள்ளது. இறப்பு மற்றும் விசேஷ காலங்க ளில் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு  மத்தியில் தான் நடந்து சென்று வரு கிறார்கள். ஆட்டோ உள்ளிட்ட சிறு  வாகனங்கள் கூட அவர்கள் குடி யிருப்பு பகுதிக்குள் சென்று வர முடி யாத அவல நிலை உள்ளது. இந்நிலையில், செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உட னடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் குடியிருப்பு பகு திக்கு ஏதாவது ஒரு பகுதியில் நிரந்த ரமான 10 அடி அகலம் கொண்ட தெருப்பாதை அமைத்துக் கொடு க்க வேண்டும் என்று வலியுறுத்தி செல்லப்பட்டி ஒன்றிய அலுவல கத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழி ப்பு முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லம் பட்டி ஒன்றிய செயலாளர் எஸ்.பி. முத்துப்பாண்டியன் மனு அளித்  தார். இந்த மனு அளிக்கும் போரா ட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செய லாளர் செ.முத்துராணி தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட தலை வர் எம்.கண்ணன், மதுரை மாந கர் மாவட்டச் செயலாளர் பி.ஏ. மாரிக்கனி, புறநகர் மாவட்ட பொரு ளாளர் பி.மகாலிங்கம், மாவட்ட நிர்  வாகிகள் செ.ஆஞ்சி, ஏ.காந்தி நாதன், செல்வம், மலர்விழி, மாநகர்  மாவட்ட நிர்வாகிகள் டீலன் ஜஸ்டின், மோகன், நடராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.பி.முருகன், ஒன்றிய செய லாளர்கள் பி.எஸ்.முத்துப்பாண்டி, பெ.ராமர், ஒன்றிய குழு உறுப்பி னர் ஏ.கணேசன், கிளைச் செயலா ளர் ஓ.முத்துக்குமார்  உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.