tamilnadu

img

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கங்கம் சார்பில்  பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம் ஜூலை 11-  தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கங்கத்தின் சார்பில், நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெருந்திரள் முறையிட்டிற்கான ஆர்ப்பாட்டம், இணைச் செயலாளர் வினோதினி தலைமையில் எழுச்சியுடன் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கா.ராம்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.  அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் 11 மாத தற்காலிக ஒப்பந்த முறையில் மாவட்ட நல்வாழ்வு சங்கங்கள் பணியமர்த்தும் அரசின் முடிவை கைவிட வேண்டும். கொரோனா காலத்தில் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 700-க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் கே. ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் த. ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ப. அந்துவன் சேரல் சிறப்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் சிவபிரசாத் நன்றியுரையாற்றினார். 40 செவிலியர்கள் கலந்து கொண்டனர்.