tamilnadu

img

வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரில் மக்களை அப்புறப்படுத்தக் கூடாது

வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரில்  மக்களை அப்புறப்படுத்தக் கூடாது

மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட மாநாடு கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஆக. 23- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, சூளகிரி, பர்கூர், கெல மங்கலம், அஞ்செட்டி வட்டங்களில் பழங்குடி மாணவர்களுக்கு சிறப்பு பள்ளி அமைத்திட வேண்டும் என்று தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட 2 வது மாநாடு சூளகிரியில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் குண்டப்பா தலை மையில் மாவட்ட குழு உறுப்பினர் முனியப்பா முன்னிலை வகித்தார்.  மாநில பொதுச் செயலாளர் சரவணன், தமிழ்நாடு விவசாய சங்க மாநிலச் செய லாளர் பி.பெருமாள், மாவட்டத் தலைவர் முருகேஷ், செயலாளர் சி.பிரகாஷ், முனி சிவா சிறப்புரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் வேலு, உத்தர குமார், சிவராஜ், ருத்ரப்பா, பால்ராஜ் கலந்து கொண்டனர். தீர்மானம் 2006 வன உரிமை சட்டப்படி பல தலை முறைகளாய் வாழும் மலைவாழ், பழங்குடி மக்களுக்கு இனச்சான்று, நல வாரிய அட்டை, குடிமனை பட்டா, விவ சாய நிலங்களுக்கு பட்டா, தொகுப்பு வீடு கள், சாலை, மின் விளக்கு, குடிநீர், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு அனைத்து வட்டங்களிலும் தொழிற்பயிற்சி மையம் ஏற்படுத்த வேண்டும், குறவன் இனத்தை பல்வேறு சாதிப் பட்டியலில் வைத்திருப்பதை நீக்கி பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும். குரும்பன்ஸ் பழங்குடியின உட்பிரி வான குறும்பர் இனத்தை பழங்குடி பட்டிய லில் சேர்த்து பழங்குடியினர் சான்று வழங்க வேண்டும், மலைவாழ் பழங்குடி மக்கள் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைத்திட வேண்டும். தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வட்டங்களில் வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரில் 165 மலை வாழ் பழங்குடி மக்களின் கிராமங்களை அப்புறப்படுத்த முயற்சியை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள்  சங்கத்தின் மாவட்டத்  தலைவராக பி.குண்டப்பா, செயலாளராக சி.குமரன், பொருளாளராக ஜெயராமன் உள்ளிட்ட 25 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.