டமாஸ்கஸ், டிச.14- தங்கள் பகுதியைத் தாண்டிச் செல்ல முயன்ற அமெரிக்கப் படைப் பிரிவைத் தடுத்து திரும்பச் செல்ல வைத்து சிரிய மக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். பயங்கரவாதிகளை எதிர்க்கிறோம் என்ற பெயரில் சிரியாவில் சில பகுதிகளில் அமெ ரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வண்டிகளில் ஆயுதங்கள் வந்திறங்கி யுள்ளன. இந்த ஆயுதங்கள் அமெரிக்கப் படைகளுக்கு மட்டுமில்லாமல், அவர்க ளின் ஆதரவோடு இயங்கும் சில பயங்கர வாத அமைப்புகளுக்கும் விநியோகிக்கப் படுகின்றன. சிரியாவின் கிழக்குப் பகுதியில் தங்கள் முகாம்கள் உள்ளன என்பதை முந்தைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஒப்புக் கொண்டிருந்தார். அதோடு, சிரியா அரசுக்கு எதிராகச் செயல்படும் அமைப்புக ளுக்கு ஆதரவும் தரப்படுகிறது. ஒரு இடத்தி லிருந்து மற்றொரு இடத்திற்குப் பாது காப்பாக அழைத்துச் செல்லும் பணியையும் அமெரிக்க ராணுவம் செய்து வருகிறது, தென்கிழக்குப் பகுதியில் உள்ள அல்-மடினியா கிராமத்தைக் கடந்து அமெரிக்கப் படை செல்ல முற்படுகையில்,
தங்கள் பகுதிக் குள் நுழையக் கூடாது என்று அமெரிக்கப் படையினரை அக்கிராமத்தினர் தடுத்திருக்கி றார்கள். மீறி செல்ல முயல்கையில், கற்களை வீசி ராணுவ வாகனங்களை கிராமத்தினர் தாக்கினர். தங்கள் வாகனங்களுக்குள் சிரியா அரசு எதிர்ப்பு தீவிரவாதிகள் இருந்த தால், வந்தவழியே அமெரிக்கப் படைகள் திரும்பின. கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம், திரும்பிச் செல்லுங்கள் என்று மக்கள் முழக்கமிட்டிருக்கிறார்கள். நிறைய வாகனங்கள் வந்திருந்ததால், அனைத்தும் திரும்புவதற்குள் மக்கள் எறிந்த கற்கள் வாகனங்களைப் பதம் பார்த்தன. சிலவற்றின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மக்களின் இந்த அமெரிக்க எதிர்ப்புத் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இரண்டு அமெரிக்க ராணுவ வாகனங்கள் தீக்கிரையாகின. சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகளை வெடிக்கச் செய்து இந்த வாகனங்கள் தாக்கப்பட்டன.
எண்ணெய் மீது கண்
பயங்கரவாதிகளை ஒழிக்கவே சிரியா மண்ணில் இருக்கிறோம் என்று அமெரிக்கா சொல்வதை பொய் என்று சிரியா வர்ணிக் கிறது. தங்கள் நாட்டில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது கண் வைத்திருக்கிறார்கள் என்று சிரியா அரசு குற்றம் சாட்டுகிறது.