திற்பரப்பு அருவியில் மக்கள் குளிக்க தடை: அருவியின் அழகை பார்த்து ரசித்த பயணிகள்
நாகர்கோவில். அக். 21- குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியின் அழைகை பார்த்தும், போட்டோ எடுத்து ரசித்தும் சென்றனர். குமரியின் குற்றாலம் என்று அழைக்கக்கூடிய திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி பண்டிகையை ஒட்டி அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அருவியின் அழகை பார்த்தும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்றும் தீபாவளி விடுமுறையை கழித்தனர்.
