மக்கள் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறை, ஜூலை 15- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 318 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கல்வி வளர்ச்சி நாள் விழா
பாபநாசம், ஜூலை 15- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக நடைபெற்றது. மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப் பட்டது. இதில் பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ், ஆசிரியை அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.