சிவகாசியில் ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு
சிவகாசி, அக்.7- விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தமிழ் நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத் தின் 5ஆவது மாநில மாநாடு மிக உற்சாகத்துட னும், எழுச்சியுடனும் தோழர் சு.சிவக்குமார் நினைவரங்கில் நடைபெற்றது. சிவகாசியில் (தனியார் திருமண மண்டபத்தில்) தோழர் கே. சுந்தரமூர்த்தி நுழைவு வாயிலில் நடைபெற்ற துவக்க நிகழ்விற்கு மாநிலத் தலைவர் நெ.இல. சீதரன் தலைமை தாங்கி, சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். வரவேற்புக்குழுத் தலை வரும், சிவகாசி மாநகராட்சி மேயருமான சங்கீதா இன்பம் வரவேற்புரையாற்றினார். அஞ்சலித் தீர்மானத்தை மாநிலச் செயலாளர் குரு. சந்திரசேகரன் முன் மொழிந்தார். தொடர்ந்து மாநாட்டை துவக்கி வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.சீனிவாசன் உரை யாற்றினார். வேலை அறிக்கையை ஓய்வூதி யர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, நிதிநிலை அறிக்கை யை ந.ஜெயச்சந்திரன் ஆகியோர் சமர்பித்தனர். அதன்பிறகு பிரதிநிதிகள் விவாதம் நடை பெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செய லாளர் க.சுவாமிநாதன் நிறைவுரையாற்றினார். முடிவில் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் வெ. குருசாமி நன்றி கூறினார். தீர்மானங்கள் தமிழக அரசு, வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயலாக்கிட வேண்டும். ஒன்றிய அரசு வழங்குவது போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.9 ஆயி ரம் வழங்க வேண்டும். பெரும்பகுதி ஓய்வூதி யர்களை உறுப்பினர்களாக கொண்ட அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்திற்கு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். அதே போல வெளியிடும் அரசாணைகளில் ஓய்வூதியர் சங்க பெயரும் இடம் பெற நட வடிக்கை எடுக்க வேண்டும். 7ஆவது ஊதிய மாற்றத்தின் மூலம் வழங்க வேண்டிய 21 மாத நிலுவை தொகையையும், கொரோனா காலத்தில் முடக்கிய அகவிலைப் படி நிலுவையை வழங்க வேண்டும். ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். “கம்முடேசன் பிடித்தம் (ஓய்வூதிய தொகுப்புத் தொகை பிடித்தம் (Commutation of Pension)” செய்யப்படும் காலத்தை 12 ஆண் டாக மாற்றம் செய்ய வேண்டும். ஓய்வூதியர் களுக்கு வருமான வரி விலக்கு முழுமையாக வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு போல் முழு ஓய்வூதியம் பெறும் பணிக் காலத்தை 20 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஊதியத்தில் ஓய்வூதியம் 50 சதவிகிதம் என்பதை 67 சதவிகிதமாக உயர்த்திட வேண் டும். குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவிகிதம் என்பதை 50 சதவிகிதமாக உயர்த்திட வேண்டும். மனிதக் கழிவை மனிதன் அகற்றும் நிலையை மாற்றிட ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
