tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘அமைதிதான் சிறந்த மருந்து’

நியூயார்க், அக். 10 - இஸ்ரேல் - ஹமாஸ் தற் காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ள நிலையில், ‘அமைதிதான் சிறந்த மருந்து’ என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் அதானோம் கெப்ரேயெசஸ் அறிவித்துள் ளார். மேலும் அவர், காசா வின் சிதைந்துபோன சுகா தார அமைப்பை மறு கட்ட மைப்பு செய்யவும் அவர் களுக்கு உதவவும் தாங்கள்  தயாராக இருக்கிறோம் என்ற துடன், அனைத்து பொது மக்களின் துயரமும் முடி வுக்கு வர ஒப்பந்தம் மதிக்கப் பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ விசாரிக்கலாம்!

சென்னை, அக். 10 - பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை  கடந்த செப்டம்பர் 24 அன்று சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது. இதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந் தது. இந்த மேல்முறை யீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசா ரணைக்கு மாற்றிய உயர்நீதி மன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துள்ளது.

அக். 18-க்குள் வடகிழக்கு பருவமழை துவங்கும்!

சென்னை, அக். 10 - தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 16 முதல் 18 தேதிக் குள் தொடங்க வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்; “அக்டோபர் 16-18 தேதிகளில் தென் மேற்கு பருவமழை விலகுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காரைக்கால் பகுதியில் தொடங்கும் என எதிர்பார்க் கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 44 செ.மீ. மழை  பதிவாவது வழக்கம்” என்று கூறி யிருக்கும் அவர், “நடப்பாண்டு 50  செ.மீ. அளவுக்கு வடகிழக்கு பருவ மழை இயல்பை காட்டிலும் அதிக மாக இருக்கலாம் என கணிக்கப்  பட்டுள்ளதாகவும், வடமாவட்டங் களில் இயல்பை விட அதிக அளவு வட பருவ மழை பெய்ய வாய்ப்பு உள்ளது; தென்மாவட்டங்களில் குறைந்த அளவே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்றும் கூறியுள்ளார்.