பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தஞ்சாவூர், செப். 12- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு பல்வேறு பாரதி அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாரதியாரின் 104 ஆவது நினைவு தினத்தையொட்டி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதியார் சிலைக்கு, பாரதி கலை இலக்கியப் பேரவை தலைவர் கல்வியாளர் கே.வி. கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாரதி இலக்கிய பேரவை சார்பில், அதன் தலைவர் புலவர் போசு தலைமையிலும், பாரதி அன்பர்கள் இலக்கிய மன்றம் சார்பில், அதன் தலைவர் பாரதி வை.நடராஜன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பாரதி கலை இலக்கிய பேரவை செயலாளர் பொன்.நடராஜன், பொருளாளர் சேகர், ஒருங்கிணைப்பாளர் ராமு, ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் தங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.