ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படியான கூலி வழங்குக
தூய்மைத்தொழிலாளர்கள் கோரிக்கை
வேலூர், ஜூலை1 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழி லாளர் சங்க வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட 5ஆம் மாநாடு திருப்பத்தூரில் செவ்வா யன்று மாவட்ட தலைவர் மு.காசி தலைமை யில் நடைபெற்றது. சிஐடியு வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் எஸ் பரசுராமன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர். எம். சரவணன் வேலை அறிக்கையும், வரவு, செலவு அறிக்கை முன் வைத்தார்.சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ஜி.ரவி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாவட்ட தலைவராக மு.காசி, செய லாளராக எம்.சரவணன், பொருளாளராக பி.அருண் உள்ளிட்ட 17 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் வரும் ஜூலை 9 அன்று நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் திரளாக பங்கேற்று வெற்றி பெற செய்வது. தூய்மைத் துறையில் தனியார் மையத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த முறையில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி யான கூலியை விடுமுறையுடன் வழங்க வேண்டும். டிஎம்சி காலனியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தூய்மைத் தொழிலாளருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.