tamilnadu

நூறு நாள் வேலையில் முழு சம்பளம் வழங்குக! மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

நூறு நாள் வேலையில் முழு சம்பளம் வழங்குக!  மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

மயிலாடுதுறை, ஜூலை 26-  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் செம்பனார்கோவில் ஒன்றிய 5 ஆவது மாநாடு  மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் முக்கூட்டு அம்பிகா மண்டபத்தில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் டி.விஜய ரங்கன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் என்.ராஜேஸ்வரி வர வேற்று பேசினார். மாவட்டத் தலைவர் டி.கணேசன் கொடியேற்றி, மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அஞ்சலி  தீர்மானத்தை ஒன்றிய துணைத் தலைவர் கே.பாரதிமோகன் வாசித்தார். வேலை அறிக்கை வரவு -செலவு அறிக்கையை ஒன்றிய செயலாளர் எம். ராஜபிள்ளை முன் வைத்தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்டப்  பொருளாளர் ஜி.லெட்சுமி, மாவட்டத் துணைத் தலைவர் டி. கோவிந்தசாமி,  மாதர் சங்க மாவட்ட ஒன்றியச் செயலா ளர் சபீர் அகமது, கே.கே. பாரதிமோகன்  உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆந்திரா வைப் போல் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். நூறு நாள் வேலையில் முழு சம்பளமும், 4 மணி  நேர வேலையும் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு  செய்யப்பட்டு, தலைவராக டி. விஜய ரங்கன், ஒன்றியச் செயலாளராக என். ராஜேஷ்வரி, பொருளாளராக எம். ராஜா பிள்ளை, துணைத் தலைவராக எஸ். தன லட்சுமி, துணைச் செயலாளராக ஜி. கார்த்திக் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலா ளர் எம். புருஷோத்தமன் நிறைவுரை யாற்றினார். மாநாட்டில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும், பாது காப்பவர்களும் கலந்து கொண்டனர்.