ரயில் நிலையத்தில் பாதுகாப்பு குறைபாட்டுடன் பார்க்கிங்
திருப்பூர், அக்.22- ரயில் நிலைய பார்கிங்கில் இரு சக்கர வாகனங்கள் பாதுகாப்பற்ற சூழலில் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களை சேர்ந்த மக் கள் மட்டுமல்லாது, பல்வேறு மாநி லங்களை சேர்ந்த மக்களும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்க ளில் பெரும்பாலானோர் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த வாரம் முதல் சொந்த ஊர் புறப்பட்டனர். இத னால் பேருந்து மற்றும் ரயில் நிலை யங்களில் தங்கள் இருசக்கர வாக னங்களை நிறுத்தி சென்றுள்ள தால், பார்க்கிங் பகுதிகள் நிறைந் துள்ளது. ரயில் நிலையத்தில் பார்க்கிங் பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டாலும் பற்றாக்குறையாகவே உள்ளது. ரயில் மூலம் சொந்த ஊர் சென்ற ஏராளமானோர் தங்கள் இருசக்கர வாகனங்களை ரயில் நிலையத்தில் உள்ள கட்டண பார்க்கிங்கில் நிறுத்தி சென்றுள்ளனர். ஆனால் இட நெருக்கடி காரணமாக அவை ஒன்றுக்கு ஒன்று இடைவெளி இன்றி நெருக்கடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மேற் கூரை இல்லாததால் மழையில் நனைந்தவாறு பாதுகாப்பில்லாத சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. இதை ரயில்வே நிர்வாகம் கவனத்தில் கொண்டு வாகனங் களை நிறுத்திச் செல்ல பாதுகாப் பான பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் வலி யுறுத்துகின்றனர்.
