சிறுபான்மை மக்கள் நலக்குழு பொதுச்செயலாளராக பி. செந்தில் குமார் தேர்வு
தென்காசி, செப். 11 - தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலக் குழு கூட்டம், செப்டம்பர் 11 அன்று தென்காசி மாவட்டம் குற்றாலத் தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலை வர் எஸ். நூர்முகமது தலைமை தாங்கி னார். தென்காசி மாவட்டச் செயலாளர் அயூப் கான் வரவேற்புரை ஆற்றினார். மாநிலப் பொதுச்செயலாளர் எம். ராம கிருஷ்ணன் தீர்மானங்களை முன் மொழிந்து பேசினார். மாநிலப் பொருளாளர் ஒய். இஸ்மா யில், மாநில நிர்வாகிகள் வ. கல்யாண சுந்தரம், அலாவுதீன், ஆர். லீமாரோஸ், இஷா ரத் அலி, அருட்தந்தை மரிய வின்சென்ட் உள்ளிட்ட மாநில நிர்வாகி கள் - மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலப் பொதுச்செய லாளராக பி. செந்தில்குமார் தேர்ந்தெ டுக்கப்பட்டார். தென்காசி மாவட்ட தலைவர் ஆர். சங்கரி நன்றியுரை ஆற்றினார். பீகாரில் தீவிர வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் திட்ட மிட்டு முஸ்லிம்கள், கிறிஸ்த வர்கள் என சிறுபான்மை மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குரிமையைப் பறித்ததை கண்டித்தும், இதேபோன்று தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை மேற்கொண்டு குறிப்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யும் சதிகளை முறியடிக்கக் குரல் கொடுப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் முதல் வாரத்தில் குடியிருப்பு பகுதிகளில் துண்ட றிக்கை பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டங்களை நடத்துவது என்றும் மாவட்ட அளவில் அனைத்து பகுதியின ரையும் இணைத்து கருத்தரங்கம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.