ஆர்.நல்லகண்ணு, சசிகாந்த் செந்தில் எம்.பி.யை சந்தித்து நலம் விசாரித்தார் பெ.சண்முகம்
சென்னை, செப். 1- உடல் நலக்குறைவால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு, மேலும், காலவரையற்ற உண்ணா நிலையை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., சசிகாந்த் செந்தில் ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண் முகம் திங்களன்று (செப்.1) சந்தித்து நலம் விசாரித்தார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா (மத்திய சென்னை), ஜி.கோபால் (திருவள்ளூர்) ஆகி யோர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பெ. சண்முகம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடையாள மான தோழர் ஆர்.நல்லகண்ணு, மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நலன் குறித்து விசாரித்தோம். தற்போது அவரது உடல் நலத் தில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. அவர் விரைவில் நலம் பெற மார்க்சிஸ்ட் கட்சி விரும்பு கிறது. ஒன்றிய பாஜக அரசு, தமிழ் நாட்டு மாணவர்களுடைய கல்வியில் கை வைக்கிறது. மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கா மல் அடாவடித்தனம் செய்கிறது. எனவே, நிதியை வழங்கக் கோரி, தனது உடலை வருத்திக் கொண்டு காலவரையற்ற உண்ணாநிலைப் போராட் டத்தில் சசிகாந்த் செந்தில் எம்பி., ஈடுபட்டுள்ளார். அவரது போராட்டத்தின் கோரிக்கை நியாயமானது. இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் கேள்விகளுக்கு பதில் அளித்த பெ. சண்முகம், “அரசுப் பள்ளிகளில் வழக்கத்தைவிட மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தனியார் கல்வி நிறுவனங்களில் 25 விழுக்காடு சேர்க்கை நடைபெறாத நிலையில், அந்த மாண வர்களில் ஒரு கணிசமான பகுதியினர் அரசுப் பள்ளி யில் சேர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். தமிழ் நாடு அரசின் மீது ஏதாவது குற்றம், குறை சொல்ல வேண்டும் என்பதையே அவர் வழக்கமாக வைத்து உள்ளார்” என்றார். “சுங்கக் கட்டணம் உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அபரிமிதமான சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்” என்றும் அவர் கூறினார். சசிகாந்த் செந்தில் எம்.பி,.யை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களும் சந்தித்து பேசினர்.