அவுட்சோர்சிங் - ஒப்பந்த முறை கூடாது! தூய்மைப்பணி- களப்பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
நாகர்கோவில், அக். 4- உள்ளாட்சி அமைப்புக ளில் பணிபுரியும் களப்பணி யாளர்கள், தூய்மைப்பணி யாளர்கள், ஓட்டுநர்கள் உட்பட பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி விடுத் துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ளாட்சி அமைப்பு களின் வழியாக டெங்கு தடுப்பு நடவடிக்கையில் களப்பணியாளர்கள் - தூய் மை காவலர்கள் உள்ளிட்ட திட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங் கப்பட்டு வருகிறது. இஎஸ்.ஐ – பிஎப் போன்ற எந்த வசதி களும் கிடையாது. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் இதர பணிகளை யும் செய்து வருகிறார்கள். கொரோனா காலத்தில் இவர்கள் பணி முக்கியத்து வம் வாய்ந்தது ஆகும்.எனவே மேற்படி பணி யாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட் டம் பேரூராட்சிகளில் சுய உதவி குழுக்கள் அவுட்சோ ர்சிங், ஒப்பந்தம், கேசுவல் வழியாக துப்பரவு பணியா ளர்கள் - திடக்கழிவு பணியா ளர்கள் - ஓட்டுநர்கள் - குடிநீர் பணியாளர்கள் - மின் பணி யாளர்கள், குழாய் பொருத் துநர்கள் என்று ஆயிரக்க ணக்கான ஊழியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் போன்ற பிடித்தம் கிடை யாது. சம்பளம் பேரூராட்சி க்கு பேரூராட்சி மாறுபாடாக வழங்கப்பட்டு வருகிறது. குறைந்த ஊதியம் வழங்கப் பட்டு வருகிறது. நிரந்தர தன்மை வாய்ந்த பணியிடங்களில் சுய உதவிக்குழு, அவுட்சோர் சிங், ஒப்பந்தம், கேசுவல் போன்ற முறைகளை ஒழித்து விட்டு மேற்படி பணியாளர் களை தமிழக அரசு பணி நிரந் தரம் செய்ய வேண்டும் . இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.