tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு துறைகளில் பணி யாற்றி வந்த ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்  செய்து, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இடமாற்றங்களின்படி பல்வேறு முக்கியப்  பொறுப்புகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள னர். உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை கூடுதல்  செயலாளராக இருந்த வெங்கட் பிரியா, இனி தமிழ்நாடு  மாநில தேர்தல் ஆணைய செயலாளராக பணியாற்றுவார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த  பானோத் ம்ருகேந்தர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்  பாதுகாப்புத் துறையின் துணைச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ்.பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார். பொது மற்றும் மறுவாழ்வு துறையின் சிறப்புச் செயலாள ராக இருந்த சஜ்ஜன்சிங் ரா சவான், இனி திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் செயலாளராக பொறுப்பேற்றார். சமூக  நலத்துறை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநராக சரண்யா அரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் செயல் அலுவலராக ஸ்வேதா  சுமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

படக் காட்சிகளை மாற்ற உத்தரவு

சென்னை: ‘மனுஷி’ படத்தில் இடம்பெற்ற சில காட்சி களை நீக்கவும் மாற்றியமைக்கவும் வசனங்களை நீக்கவும்  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காட்சிகளை நீக்கி மாற்றியமைத்து 2 வாரத்தில் தணிக்கை  வாரியத்துக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என  ‘மனுஷி’ படத்தை தயாரித்துள்ள இயக்குநர் வெற்றிமாற னுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பித்த 2 வாரங்களில் சான்று வழங்க, தணிக்கை  வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது. ‘மனுஷி’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து வெற்றிமாறன் வழக்கு தொடர்ந் திருந்தார்.

சட்டவிரோதச் செயல்களை ஏற்க இயலாது’

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  சட்ட விரோதமாக தரிசன டிக்கெட் விற்பனை நடைபெறுவதாக வும் அதனை தடுத்து, டிக்கெட் விற்பனையை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பக்தர்கள் கோவிலுக்கு வருவது மன  நிம்மதியை தேடித்தான். அங்கும் சட்டவிரோதச் செயல்களை  அனுமதிக்க முடியாது. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், சட்ட விரோத தரிசன டிக்கெட் விற்பனையைத் தடுக்க, அறநிலையத் துறையும் காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.  கோவிலில் பாதுகாப்புக்கு, கூடுதல் காவலர்களை பணியில்  அமர்த்தவும் தூத்துக்குடி எஸ்.பி.-க்கு உத்தரவிடப்பட்டது.

சத்துணவு ஊழியர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை: காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்பு மற்றும் அகவிலைப்படியுடன் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம், பணிக்கொடை 5 லட்சம் வழங்க வேண்டும். 63 ஆயிரம் காலிப் பணியி டங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.28 அன்று  எழிலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து இரண்டு நாள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர்  பி.செல்லதுரை, பொதுச் செயலாளர் ஏ.ஜெசி, பொருளாளர் வே.சித்ரா உள்ளிட்ட தலைவர் களுடன் இணை இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை நடத்திய இயக்கு நர், “கூடுதல் பொறுப்பு மையங்களை கவனிக் கும் அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் படி  1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பணிக்காக  காத்திருக்கும் சுமார் 9 ஆயிரம் பேர், காலியாக உள்ள இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். 5 வருட பணி முடித்த உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வு வழங்கப்படும்” என்று  உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம்  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தலை வர்கள் அறிவித்தனர்.

உடல்நிலையில் முன்னேற்றம்

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணுவின் உடல்நிலையில் முன் னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரி வித்திருக்கிறார்.

உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஒரு பெண்  வழக்கறிஞர் தனது கல்லூரி காலத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணைய தளங்களில் பகிரப்பட்டிருந் தன. இதுகுறித்து அந்தப்  பெண் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, “பெண் வழக்க றிஞர் அந்தரங்க வீடியோக் களை அகற்ற உத்தரவிட்ட பிறகும், தமிழகத்தில் மட்டும் அது மீண்டும் மீண் டும் எவ்வாறு பரவுகிறது என்றும், இந்த வழக்கின்  புலன் விசாரணை எந்த  நிலையில் உள்ளது” என்றும் கேள்வி எழுப்பி னார். பெண் வழக்கறிஞர் அந்தரங்க வீடியோ இடம் பெற்றுள்ள புதிய இணைப்பு  உட்பட நான்கு இணைய தளங்களையும் முடக்க உத்தரவிட்ட நீதிபதி, விசார ணையை செப். 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனை குண்டாஸில் அடைத்ததை எதிர்த்து  அவரது தாயார் வழக்கு தொடர்ந்திருந்தார். கொடும் குற்றச்  செயல்களை செய்த ஞானசேகரனால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டது என காவல்துறை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கின் விசாரணையை 2  வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் உத்தரவிட்டனர்.