tamilnadu

img

முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டம்

முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டம்'

திருச்சிராப்பள்ளி, அக். 16-  திருச்சி காந்தி மார்க்கெட் லாரி செட்டில், சேகர் பிரதர்ஸ் என்ற முதலாளி, 20 ஆண்டுகள் பணியாற்றிய தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து, ஜி.எம் என்ற பெயரில் புதிய லாரி செட்டை துவக்கி மோசடி செய்வதை கண்டித்தும். 12 தொழிலாளர்களுக்கு வேலை தர வேண்டும் என்ற தொழிலாளர் இணை ஆணையரின் உத்தரவை அமலாக்க வலியுறுத்தியும், தீபாவளி பண்டிகை போனஸ் உடனே வழங்க கோரியும் சிஐடியு லாரி புக்கிங் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சங்கம் சார்பில் வியாழனன்று காந்தி சிலை அருகில் குடும்பத்துடன் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு, லாரி புக்கிங் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சங்க செயலாளர் ராமர் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் மணிமாறன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார், மாவட்டத் தலைவர் ரமேஷ், லாரி புக்கிங் ஆபீஸ் சங்க தலைவர் சதாசிவம் ஆகியோர் உரையாற்றினர். லாரி புக்கிங் ஆபீஸ் பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.