tamilnadu

img

2 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் சர்க்கரை ஆலைகளை திறந்திடுக!

சென்னை, டிச.15- தமிழ்நாட்டில் இரண்டாண்டு காலமாக மூடிக் கிடக்கும் அலங்கா நல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட 5 சர்க்கரை ஆலை களை உடனடியாக திறந்திட வேண்டு மென தமிழக முதல்வருக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டு கோள் விடுத்துள்ளது. ஆலையை திறக்குமாறு அலங்கா நல்லூரில் விவசாயிகள் கடந்த இரண்டு நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திவரும் நிலையில், முதல்வருக்கு கோரிக்கை விடுத்து புதனன்று கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதி யுள்ள கடிதம் வருமாறு: தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதிலும் சர்க்கரை உற்பத்தி யிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது கூட்டுறவு- பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கரும்பு பண பாக்கி முழுவதும் வழங்கப்பட்டுவிட் டது. 2020-21 கரும்பு அரவை பருவம் முடிந்த நிலையில் கூட்டுறவு- பொதுத் துறை ஆலைகளில் கரும்பு பண பாக்கி இல்லாதது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மறுபுறம் இந்த ஆண்டு தேவைக்கு அதிகமாக மழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளதும் கரும்பு சாகுபடி அதிகரித்திட வாய்ப்புகள் உள்ளது. 

இத்தகு சூழலில், தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு ஆலை, ஆம்பூர் கூட்டு றவு ஆலை, தருமபுரி கூட்டுறவு ஆலை, திருப்பத்தூர் கூட்டுறவு ஆலை, காவிரி டெல்டா மாவட்டத்திலுள்ள என்.பி.கே.ஆர் கூட்டுறவு ஆலை ஆகிய ஐந்து சர்க்கரை ஆலைகள் கடந்த இரண் டாண்டுகளாக மூடிக்கிடக்கின்றன. கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூடி யுள்ளதாலேயே விவசாயிகள் நம் பிக்கையோடு கரும்பு சாகுபடி செய் யாத நிலையும் உள்ளது. மூடியிருக்கும்  கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் கொரானா பெருந்தொற்று காலத்தில் வே லையின்றி, சம்பளம் இன்றி பெரும் சிரமங்களை அனுபவித்தனர். தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை காத்தி டவும், விவசாயிகளின் நலன்களை காத்திடவும், மூடியுள்ள அனைத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகளையும் திறந்து 2021-22 பருவத்திற்கு கரும்பு அரவை செய்திட தமிழக முதல்வர் ஆவன செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டாவது நாளாக காத்திருக்கும் போராட்டம் 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டுக்கான அரவை இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.  அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை யில் 2 ஆயிரம் ஏக்கர் பதிவு செய்யப்பட் டுள்ளது. இதில் சுமார் 70 ஆயிரம் டன் கரும்பு அரவைக்கு உள்ளது. தரணி ஆலை இயங்காத நிலையில், அந்த ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட கரும்பு 1.50 லட்சம் டன்னை அலங்காநல்லூர் ஆலைக்கு அனுப்ப அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் பதியாத கரும்பு ஆலைக்கு சுமார் 15 ஆயிரம் டன் அரவைக்கு வரவுள்ளது.  மேலும் அரசு சார்பில் ரூ.110 கோடி யும், கரும்பு விவசாயிகளிடம் பிடித்தம் செய்த பணம் ரூ.10 கோடியும் முதலீடு செய்து தொடரப்பட்ட உப மின் நிலை யம் வேலை 85 சதவீதம் முடிவடைந் துள்ளது. வேலையை துரிதப்படுத்தி விரைந்து முடித்து உடனே செயல்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும். இதை செயல்பாட்டிற்கு கொண்டு வரா விட்டால் ரூ.120 வரை நஷ்டமாகும். எனவே, இந்தாண்டே உப மின் நிலை யத்தையும், ஆலையையும் இயக்க வேண்டும். 

ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள 6 எத்த னால் பிளாண்டில் 1- பிளாண்டை ஆலைக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.  தென் மாவட்டத்திற்கு மதுரை தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று தான் இருக்கிறது. எனவே, துணை மின் நிலையத்தை இயக்கி யும், எத்தனால் பிளாண்டை வரச் செய்வதன் மூலமாகவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் தேசிய கூட்டுறவு சர்க் கரை ஆலை அபரிமிதமான லாபத் தில் இயங்கும்.  எனவே, தமிழக அரசு அலங்கா நல்லூர் சர்க்கரை ஆலையை இந் தாண்டே இயக்கி அரவையை துவங் கிட வேண்டும் என கோரியும், விவ சாயிகளிடம் ஆலை கரும்பினை கொள் முதல் செய்திட கோரியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநி லத் தலைவர் என்.பழனிச்சாமி தலை மையில் ஆலையை துவக்கும் வரை காத்திருக்கும் போராட்டம் செவ்வா யன்று துவங்கியது.  போராட்டத்தின் இரண்டாவது நாளான புதனன்று கரும்பு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் கரு. கதிரேசன், அலங்காநல்லூர் செயலா ளர் என்.ஸ்டாலின்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.பி.இளங்கோவன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.சேகர், பொன் னையா, கரும்பு விவசாயி சங்க நிர்வாகி கள், கே.மொக்கமாயன், பி.போஸ், ஆர்.ராம்ராஜ், அய்யம்பட்டி பன்னீர் செல்வம், கல்லம்பட்டி முருகன், எம்.ராஜாமுகமது உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.  போராட்டத்தில், அதிமுக திருமங்க லம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போராட் டத்தை வாழ்த்தி கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், மாநிலக் குழு உறுப்பினர் சி.ராம கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் பா.ரவி, சிஐடியு மாவட்டத் தலை வர் செ.கண்ணன், மாவட்டச் செய லாளர் கே.அரவிந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.