tamilnadu

img

நிலவை எட்டிப் பிடிக்கும் வெங்காய விலை

2023 ஜூலை 24-31 வாரத்தில், வெங்காயத்தின் மொத்த விலை குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,161 ஆக இருந்தது. ஒரு மாதத் திற்குப் பிறகு, குவிண்டால் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 60 சதவீதம் உயர்ந்து ரூ.1,819 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெங்காயம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,014 முதல் ரூ.1,022 வரை ஓரளவு நிலையானதாக இருந்ததை காட்டுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு (2023) ஆகஸ்ட் 16-23 காலகட்டத்தில் வெங்காயத்தின் விலை மூச்சடைக்கக்கூடிய வகையில் ஏறக்குறைய 80 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த உடனடி நெருக்கடிக்குப் பிறகு அரசாங்கம் விழித்துக் கொண்டது. முதலில், ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதித்தது.  இது ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் ஏற்பாடாக செய் யப்பட்ட ஒரு வழியாகும். அதன்பிறகு, சில நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 20 அன்று ஒன்றிய  வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயி களிடமிருந்து வெங்காயத்தை குவிண்டாலுக்கு ரூ.2,410 என்ற விலையில் அரசு கொள்முதல் செய்யும் என்று அறிவித்தார். 

கொள்முதல் இலக்கு 3 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 5 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்த நடவடிக்கைகள் சந்தையில் விலை ஏற்றத்தை மட்டுப்படுத்தும்  விளைவை ஏற்படுத்த வேண்டும். ஆனால் தட்டுப்பாடு நிலவி  வருவதால், வெங்காயத்தின் விலை செப்டம் பரில் புதிய உச்சத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள் ளது. நாசிக் (இதுவே மிகப்பெரிய மொத்த வெங் காய சந்தைகள் அமைந்துள்ள இடம்) மற்றும் மும்பையில் உள்ள பெரிய வியாபாரிகள் வெங் காயத்தை மொத்தமாக வாங்கிக் குவித்து வைப்பது பதுக்கி வைப்பது என்பதை நீண்ட  காலமாக செய்து வருகின்றனர். 2012ல் இந்திய அரசின் ஆணையத்தின் அறிக்கை, வர்த்தகர் கள் மற்றும் கமிஷன் ஏஜெண்டுகளுக்கு இடையே உள்ள “கூட்டு” சதியினை சுட்டிக்காட்டியது; “குறைந்த விலை ஏலம்”; மகாராஷ்டிரா மற்றும்  கர்நாடக வெங்காய வர்த்தகத்தில் “சிறந்த விலையை அடைய செயற்கையான கிராக்கி யை உருவாக்குவதற்காக வேண்டுமென்றே பதுக்கி வைப்பதில் ஈடுபடுதல்” போன்றவற்றை சுட்டிக் காட்டியது. ஆணையம் பிற நடவடிக்கைகள் எடுப்பது மட்டுமல்லாமல், கடுமையான கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை தலையீடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன் பிறகும்  பெரிதாக எதுவும் மாறவில்லை. உண்மையில்,  இந்த தடையற்ற சந்தைகளை ஒழுங்குபடுத்து வதற்கான அரசியல் உறுதிப்பாடு மோடி அர சிடம் குறைவாகவே உள்ளது. 

 பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் சுபோத் வர்மா 
எழுதியுள்ள கட்டுரையில் இருந்து...
 

சுருக்கம் : ஆர்.எஸ்.செண்பகம்