யானை தாக்கி ஒருவர் பலி
கோவை, ஆக.24- வேட்டைக்காரன் கோவில் அருகே ஒற்றை யானை தாக்கி பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், ஆட்டுக்கல் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மருதாசலம், முரு கன், சதீஷ், ராஜா என்ற சகாயம் ஆகியோர், மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கோவிலுக்கு சென்று திரும்பினார். வரும் வழியில் சீமாறு புல் சேகரித்துள்ளனர். அப்பொழுது அங்கு வந்த ஒற்றை யானை அவர்களை துரத்தியது. அதில் மூன்று பேர் தப்பி ஓடிய நிலையில், மருதாசலம் மட்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், ஞாயிறன்று அங்கு சென்ற வனத்துறையினர், வேட்டைக்காரன் கோவில் அருகே மருதாசலம் முகம் சிதைந்த நிலையில் உடல் இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தொண்டாமுத்தூர் காவல் துறையினர் அவரது உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.