tamilnadu

img

தோழர் ஏ.நல்லசிவன் நூற்றாண்டு நிறைவு விழா

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரும் விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் ஏ.நல்லசிவன்  நூற்றாண்டு நிறைவு விழா அம்பாசமுத்திரத்தில் ஜூலை 16 ஞாயிறன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் தோழர் ஏ.நல்லசிவன் நூற்றாண்டு சிறப்பு மலரை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.  நிகழ்வில் மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், ஆர்.கருமலையான், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ்,  மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், பி.கற்பகம், பி.பூமயில், மாவட்டச் செயலாளர்கள் க.ஸ்ரீராம் (நெல்லை), கே.பி.ஆறுமுகம்(தூத்துக்குடி), உ.முத்துப்பாண்டியன்(தென்காசி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  (செய்திகள் : 4)