tamilnadu

img

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினரைக் கண்டித்து, தஞ்சையில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில், பழைய பேருந்து நிலையம் விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகில், சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால், மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை காரணம் காட்டி, தஞ்சை காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், சிபிஎம் மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார், என்.சரவணன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மூத்த தலைவர் காளியப்பன், மாவட்டச் செயலாளர் தேவா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச் செயலாளர் ராவணன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்டத் தலைவர் அருள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.