tamilnadu

img

எலி வளையின் நான்கு பக்கங்களிலும், சில்க்யாரா கதாநாயகர்கள் விளிம்பை சுரண்டி வாழ்கிறார்கள் - இஷ்ஷிதா மிஸ்ரா-சில்க்யாரா

அவர் 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கலாம். ஆனால், 35 வயதான முகமது ரஷீத் மிகச்சிறப் பாக, 400 மணி நேரத்திற்கும் அதிகமாக சில்க்யாரா இடிந்து விழுந்த சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41  குறைந்த ஊதிய ஒப்பந்தத் தொழிலாளர்களை மீட்ட அனை வரது கவனத்தையும் ஈர்த்த மீட்பு நடவடிக்கை பற்றி விவரமாக எடுத்துரைக்கிறார். அந்த மீட்பு நடவடிக்கை இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களால் நடைபெறவில்லை. ஆனால் அவரைப் போன்ற எலி-வளை சுரங்கம் பறிப்பவர்களால் வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் தற்போது தடை செய்யப்பட்டுள்ள அந்த தொழிலில் நிபுணர்கள்.  “தொழிலாளர்கள், அவர்களின் சகோதரத் தொழிலாளர் களால் மீட்கப்பட்டனர்”, என்று, அந்த இடிபாடுகளில் தோண்டப்பட்ட மிகச் சிறிய சுரங்கத்தில் ஆறு மணி நேரம்  60 மீட்டர் ஆழம் வரை வேலைபார்த்த மேற்கு உத்தரப்பிர தேசத்தின் பாக்பத் நகரில் வசிக்கும் அவர் கருத்து தெரி வித்தார்.  அவர்  தனது வாழ்நாளில் என்றைக்குமே தனது பணியை செய்தமைக்காக இத்தகைய பாராட்டுகளைப் பெற்றதில்லை என்று தெரிவிக்கிறார். 

மூச்சுத் திணறலை தடுக்க ஈரத்துணி...

அந்த 26 மணி நேரப் பணியில், அந்த எலி-வளை குழுவினர் 12 பேர்களும், அவர்கள் பெரும்பாலும், உத்தரப்பிர தேசத்தின் பட்டியலின மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர், அந்த இடிபாடுகளின் கடைசி 18 மீட்டர் தூரத்தை(சுமார் 54 அடிக்கு மேல்), 80 செ.மீ. குறுக்களவு கொண்ட சிறிய குழாயி லிருந்து கொண்டு, தங்களின் கை உளிகளால் உடைத்தும், தங்கள் கை ஷவல்களால் தோண்டிய மண்ணை அள்ளியும், இடையே குறுக்கிடும் இரும்பு கர்டர்களையும், மிகப்பெரிய பாறைகளையும் காஸ் கட்டர் கொண்டு வெட்டி யும் - இவைகளே இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களை முடக்கிக் போட்டவை - அவைகளை மனித முயற்சியால் வெற்றிகண்டனர். அவர்கள் ஒரு சிறு டிராலியை தோண்டப் பட்ட மண் மற்றும் இதர பொருட்களை வெளியேற்றப் பயன் படுத்தினர், அவர்கள் அவ்வாறு தோண்டும் போது அந்த சிறிய குழாயில் எழும் புகை மற்றும் புழுதி ஆகியவற்றால் மூச்சுத் திணறல் ஏற்படும் போது தங்களை பாதுகாத்துக் கொள்ள ஈரத் துணியை தங்கள் மூக்கின் மீது போட்டுக் கொண்டனர்.  

அவர்களின் எளிய விருப்பங்கள்

அந்தக் குழுவினர் சில்க்யாரா இடிபாடுகளில் வேலை  பார்த்ததற்கு ஒரு பைசாகூட ஊதியமாகப் பெற விரும்ப வில்லை. ஆனால், உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கார் சிங் தாமி ஒவ்வொரு எலி-வளைத் தொழிலாளிக்கும்  ரூ.50,000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.  அந்த கதாநாயகர்களிடம், அவர்களின் தேவை என்ன என்று கேட்கப்பட்டபோது, அவர்களின் விருப்பங்கள் மிக எளியதாகவும், ஆழமானதாகவும் இருந்தன. வயதான தாயார்  தங்க ஒரு காங்கிரீட் வீடு, கிராமப்புறத்திற்கு சாலை, அன்பு மற்றும் சாதி மதங்களைக் கடந்த மனித மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும், ஆயுட்காப்பீடு, அனைத்து தொழி லாளர்களுக்கும் நியாய ஊதியம். மேலும், இனிமேலும் இத்தகைய ஒரு இடிந்து விழும் நிலைமை உருவாகாலாது என்பதற்கான உத்தரவாதம் ஆகியவையே என்று தெரிவித்தனர். 

மரியாதையும் அன்பும் நிலவ...

45 வயதான முகமது இர்ஷாத் பேசுகையில், “எனது விருப்பமே குறைந்த பட்சமாக ஒவ்வொரு மனிதருமே மனி தர்களுக்குரிய அனைத்து மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும், நாட்டில் அன்பு நிலவ வேண்டும்” என்று தெரிவித்தார்.  2001லிருந்து எலி-வளை தொழிலாளியாக இருந்தா லும், மீரட்டை சொந்த ஊராகக் கொண்ட இவர் தில்லிக்கு புலம் பெயர்ந்து ஒரு தனியார் சுரங்கம் தோண்டும் நிறு வனத்தில் பணியில் சேர்ந்தார்; அவரால் அவருக்கென்று இது வரை ஒரு வீடு கட்ட முடியவில்லை. அவர் தனது குழந்தை கள் படித்து கவுரவமான வேலைக்கு போக வேண்டும். தங்களைப் போன்று அவர்கள் வாழ்க்கையை ஆபத்தாக மாற்றிக் கொள்ளக் கூடாது என்று விரும்புவதாக தெரிவித்தார். எலி-வளை தோண்டும் தொழில் இந்தியாவில் தடை  செய்யப்பட்டுள்ளது. காரணம் அது விஞ்ஞான முறைப்படி இல்லை என்பதாலும், அது ஆபத்து நிறைந்தது என்பதா லும். ஆனால் மிகக்குறைந்த அளவில் நிலக்கரி இருக்கும் இடங்களில் இன்னமும் இதுதான் ஒரே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. மிகவும் அதிகமாக மேகாலயாவில். சுமார் 2-3 அடி அகலமுள்ள சிறு சிறு ஆழ்துளை பள்ளங் கள் தோண்டப்பட்டு அதில் மனிதர்கள் அதிலும் குறிப்பாக சிறார்கள் இறக்கிவிடப்பட்டு  நிலக்கரி எடுக்கப்படுகிறது. இந்தத் திறன்கள் தற்போது சில்க்யாராவில் விலைமதிப்பற்றதாகிவிட்டது. 

சோர்ந்தால் 10வயது மகனின் வார்த்தைகளை நினைப்பேன்

முன்னா குரேஷியே(வயது 33). அந்த சுரங்கங்கள் தோண்டுபவர்களில், முதன் முதலாக, அந்த இடிபாடுகளின் கடைசி பாறைகளை அகற்றி, அவர்கள் தோண்டியதிற்கு அப்பால் இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்கள் தங்கள் கன்னங்களில் நீர்வழியப் பார்த்துக் கொண்டிருந்ததை முதன் முதலாகப் பார்த்தவர்.  “எனக்கு எப்போதெல்லாம் சோர்வு ஏற்பட்டதோ அப்போ தெல்லாம் நான் எனது 10 வயது மகன் பெய்ஸ் சொன்ன வார்த்தையை நினைத்துக் கொள்வேன். அந்த சிறுவன் தனது தந்தையிடம், நீங்கள் அவர்களை மீட்ட பிறகேதான் திரும்ப வேண்டும்” என்று கட்டளையிட்டிருந்தான். அவருக்கு 3 குழந்தைகள், அவருக்கு சிறிய கோதுமை வயல் உள்ளது, அதில் வரும் விளைச்சல் அந்த குடும்பத்தின் உணவுத் தேவைக்கு பயன்படுகிறது.  கஸ்கஞ்ச் பகுதியில் வாழும் பெரோஸ் குரேஷி ஒரு நாளைக்கு ரூ.500 -800 வரை சம்பாதித்து தனது குடும்பத்தை காப்பாற்றுபவர். தான் “ஆசிர்வாதிக்கப்பட்டதால்தான்” இந்த மீட்பு நடவடிக்கையில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக தெரிவிக்கிறார். அவர் அரசாங்கத்திடம் வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை சில்க்யாராவில் ஏற்பட்டது போன்ற மற்றொரு இடிபாடு இனியும் எந்த சுரங்கத்திலும் ஏற்படக் கூடாது என்பதே. “என்னுடைய சகோதரர்களை மீட்க நான் எப்போது வேண்டுமானாலும் வருவேன், ஆனால் இனி  இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் நாம் தவிர்க்க முயல வேண்டும். ஏன், நாம் தவிர்க்க வேண்டும்” என்கிறார். 

ஈத் - பண்டிகையில் கூட இத்தனை மகிழ்ச்சியில்லை

இந்தக் குழுவின் தலைவர் என்ற முறையில், 45 வய தான வாகீல் ஹாசன், அவருடைய குழுவினர் எப்போதெல் லாம் மனம் தளர்ந்தனரோ அப்போதெல்லாம் அவர்களை  உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்,  அந்தத் தொழிலாளர் களை மீட்காமல் திரும்புவதில்லை என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார். “ஈத்-தின் போது கூட நான் மகிழ்ச்சியாக இல்லை, காரணம் நான் எனது சகோதரனை மீட்கும் பணியில் இருந்தேன்” என்கிறார் அவர். 

தாயாருக்கு ஒரு வீடு

ஜதின் கஷ்யப் (வயது24) மற்றும் அவர் சகோதரர் சவ்ரப்(21). இருவரும் அந்தக் குழுவின் மிகவும் வயது குறைந்தவர்கள். அவர்கள் எலி-வளை தோண்டும் தொழி லில் 13-14 வயதிலிருந்து தொடங்கியுள்ளனர். அவர்கள் இந்த மீட்புக் குழுவில் இடம்பெற, தங்கள் சொந்த கிராமமான பூலந்தேஸ்வரிலிருந்து வந்துள்ளனர். அவர்கள் தீபாவளி யை குடிசைவீட்டில் குடியிருக்கும் தங்களின் தாயாருடன் கொண்டாட ஊருக்குச் சென்றுள்ளனர். “நாங்கள் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு பக்கா வீடு கட்டிக் கொள்ள முடியுமா?” என சிறியவர் சவ்ரப் அப்பாவி யாக  கேட்க, மூத்தவர் கஷ்யப் அவர் முதுகில் தட்டி, அரசாங்கத்தி டம் எந்த உதவியும் இதற்காக கேட்கக் கூடாது என்று கூறுகிறார்.  35 வயதான முகம்மது நசீம் எப்போதும் புன்னகை பூத்துக் கொண்டிருக்கிறார். அவரை பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு, அவரின் உணர்ச்சி என்ன என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், தனது சகோதரர்கள் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர்கள் வெற்றிகரமாக மீட்டதும், மீட்பு பணி நிறைவடைந்த செய்தி  கேட்டதும் கொண்டாட்டம் தொடங்கி அவர்கள் கீர் செய்துள்ள தாக தெரிவித்ததையும் பகிர்ந்து கொண்டார். 

கவுரவமான ஊதியம் ஆயுள் காப்பீடு

புலந்தேஸ்வர் பகுதியைச் சார்ந்த 25 வயதான தலித் அன்கூர்,   சில்க்யாராவிலிருந்து ஒரு எளிய நினைவுப் பொரு ளை எடுத்துக் கொண்டிருக்கிறார். சாக்லேட்களும், உலர் பழங்களும், இடிபாடுகளில் சிக்கியவர்கள், அதிலிருந்து மீண்டு வந்து இவர்களைக் கட்டிக் கொண்டு அளித்த அன்பளிப்பு அவை. அவர் அரசாங்கத்திடம் வைக்கும் கோரிக்கை, இந்தியாவில் தொழிலாளர்களுக்கு ஒரு கவுரவ மான ஊதியம் வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும்”. 

சாலை தேவை

29 வயதான மோனு குமார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு வைக்கும் கோரிக்கை, “என்னு டைய கிராமம் மிகவும் மோசமாக உள்ளது. அரசாங்கம் ஒரு சாலை அமைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்” என்று தெரிவிக்கிறார்.  40 வயதான தேவேந்திரா, புலந்தேஸ்வர் கிராமத்தின் தலித்  சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் பேசும் போது, சில்க்யாராவுக்கு கிளம்பும் போது தனது மனைவி தன்னை தடுத்ததாகவும், ஆனால், அவர் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் குழாய்  மூலம் பேசும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலான தைப் பார்த்த போது, “அவர்கள் தன்னை அழைப்பது போலவே உணர்ந்ததாக தெரிவிக்கிறார்”. அவர் வீடு திரும்பும்முன் தனது குழந்தைகளுக்கு சில கம்பிளி ஆடைகளை உத்தரகாசியில் வாங்க விருப்பம் கொண்டுள்ளார். 

\மனிதனாக நடத்தினால் போதும்

நசீர் அகமது(வயது 32), தனக்கு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட யாரிடமும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என்று தெரி விக்கிறார். ஏனெனில் இந்த மீட்பு நடவடிக்கை அவரது சகோ தரத் தொழிலாளர்களை மீட்பது குறித்து. அவர் விரும்பு வதெல்லாம், மக்கள் அவரை ஹீரோவாக வழிபடவேண்டாம், மாறாக மனிதனாக நடத்தினால் போதும்” என்கிறார். 

“தி இந்து” தேதி 30.11.2023
தமிழில் : ஆனந்தன், தூத்துக்குடி