tamilnadu

img

வடமாநில தொழிலாளர் வருகைக்காக காத்திருக்கிறார்களா அதிகாரிகள்... மதுரை “ஸ்மார்ட் சிட்டி” பணிகள் ஸ்தம்பிப்பு....

மதுரை:
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஸ்தம்பித்துள்ளது.  மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகள், மாரியம்மன் தெப்பக்குளம், பெரியார் பேருந்து நிலையம், வைகை ஆறு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில்14 திட்டங்கள் ரூ.1,012 கோடியில் மின் னல் வேகத்தில் தொடங்கப்பட்டது. தற்போது ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. பெரியார் பேருந்து நிலையக் கட்டுமானப் பணியில் தற்போது வரை குழிகள்தோண்டி கான்கிரீட் தூண்கள் மட்டுமே இதுவரை அமைக்கப்பட்டுள்ளன.  ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடக்கும் 11 மாநகராட்சிகளில் மதுரை 8-வது இடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 14 பணிகளில் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் வளாகத்தில்  பழ மார்க்கெட் பணி மட்டும்முடிவடைந்துள்ளது. பெரியார் பேருந்துநிலையக் கட்டுமானப்பணி 35 சதவீதம், வைகை ஆறு திட்டம் 50 சதவீதம், பல்லடுக்கு வாகனக் காப்பகம் 70 சதவீதம் முடிந்துள்ளன.  வாகனக் காப்பகப் பணிமட்டும் செப்டம்பர் இறுதிக்குள்  முழுமைபெறும் என பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

பாரம்பரியக் கட்டடங்கள் மேம்படுத்தும் பணி 40 சதவீதம், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டம் 2.65 சதவீதம், எல்இடி தெருவிளக்குகள் பணி 29.06 சதவீதம், குப்பைகளை உரமாக்கும் திட்டம் 24.83 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. குறிப்பாக மதுரையின் நான்கு மாசிவீதிகளில் நடைபெறும் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. கீழமாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதிஆகிய பகுதிகளில் மழைநீர் கால்வாய்,கேபிள் பதிக்கும் பணிகள் ஒரே நேரத்தில்  நடைபெறுவதால் கடுமையானபோக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, மழை பெய்தால் தோண்டப்படும் பள் ளங்களில் தண்ணீர் தேங்குவதால் கட்டுமானப் பணி தாமதமாகிறது.  

வாகன நெரிசல் காரணமாக கீழஆவணி மூல வீதி இந்தியன் வங்கி அருகில் சுமார் நான்கு அடி அழத்திற்க்கு 50 அடி நீளத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம், கார், ஆட்டோக்கள்  செல்கின்றன. பொதுப் போக்குவரத்து தொடங்கிவிட்டால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். ஸ்மார்ட் சிட்டி பணிகளை 2020-ஆம் ஆண்டு துவக்கத்தில் முடிக்க  இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போதுள்ள நிலையில் இன்னும்ஓராண்டு நீடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.குறிப்பாக வடமாநிலத் தொழிலாளர்களை நம்பியே இப்பணிகள் நிறைவடையும் காலம் முடிவு செய்யப்படுமென்கின்றனர் விஷயமறிந்தவர்கள். ஆனால் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவோ புலம்பெயர் தொழிலாளர் கள் இல்லையென்றாலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொய்வின்றி நடப்பதாகக்கூறுகிறார். அமைச்சர் பேட்டிக்கும். யதார்த்த நிலைக்கும் சிறிதும் தொடர் பில்லை என்பதே உண்மை.

;