காலமானார் மானாமதுரை
,அக்.17- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பூக்கார தெருவைச் சேர்ந்தவர் சேதுக்கரசி மணிமேகலை (62). உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை வடமலையான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், அக்டோபர் 17 வெள்ளியன்று காலமானார். இவர், தீக்கதிர் நாளிதழ் சிவகங்கை மாவட்ட செய்தியாளர் ஜே.ராமச்சந்திரன் மனைவியும் திரைப்படத்துறை இயக்குநர் கார்த்திகேயன், தேவகோட்டை நகராட்சி உதவிப் பொறியாளர் முத்துக்குமார் ஆகியோரின் தாயாரும் ஆவார். மானா மதுரை செர்டு தொண்டு நிறுவனத்தின் மகளிர் குழு தலைவியாக 25 வருட காலம் திறம்பட பணியாற்றி யவர். இவர் கண்தானம் செய்துள்ளார். அன்னாரது மறைவுக்கு தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, சிறப்பாசிரியர் மதுக்கூர் ராம லிங்கம், ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொதுமேலா ளர் ஜோ.ராஜ்மோகன் செய்தி ஆசிரியர் அ.மாரி முத்து ஆகியோர்ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இறுதி நிகழ்ச்சி அக்டோபர் 18 சனிக்கிழமை காலை 11 மணி அளவில் மானாமதுரையில் நடைபெறுகிறது.
