tamilnadu

img

அக்.7 - பூவந்தியில் அளவை செய்து தருவதாக உறுதி

அக்.7 - பூவந்தியில் அளவை செய்து தருவதாக உறுதி

142 குடும்பங்களுக்கு பட்டா கோரி போராட்டம்

சிவகங்கை, செப்.30- பூவந்தியில் 1998-ஆம்  ஆண்டு 142 குடும்பங்க ளுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவுக்கு நில அளவை செய்து தர வேண்  டும் எனக் கோரி தீண்டாமை  ஒழிப்பு முன்னணி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்  பில் செவ்வாயன்று தோழர் சீனிவாச ராவ் நினைவு நாளில் குடியேறும் போராட் டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்  டச் செயலாளர் கருப்புசாமி  தலைமையில், மாவட்டத்  தலைவர் முத்துராமலிங்க பூபதி, செயற்குழு உறுப்பி னர் அய்யம்பாண்டி, மாவட்ட  பொருளாளர் வீரய்யா, கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் சக்திவேல், முன்  னாள் துணைத் தலைவர் மகா லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் திருபுவனம் வட்டாட்சியர் ஆனந்தபூபா லன், ஆதி திராவிட நலத் துறை சிறப்பு வட்டாட்சியர் வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அக்டோபர் 7ஆம் தேதி நில அளவை செய்து  தருவதாக எழுத்துப்பூர்வ மாக உறுதி அளித்தனர். இத னைத் தொடர்ந்து போராட் டக்காரர்கள் கலைந்துச் சென் றனர்.