tamilnadu

img

‘சத்துணவுத் திட்டம்: தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்’

சென்னை, டிச. 4- சமூக நலன் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குநரால் சனிக்கிழமை (டிச. 3) நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில் கீழ்காணும் விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே வளாகத்தில் செயல்படும் இரண்டு பள்ளிகளில் அமைந்துள்ள சத்துணவு மையங்களின் விபரம். ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து சத்துணவு மையங்களையும் கணக்கில் கொண்டு, வட்டாரத்தை பொறுத்தவரை ஊராட்சியினை அடிப் படையாகவும், மாநகராட்சி, நகராட்சி களை பொருத்தமட்டில் வார்டுகளை அடிப்படையாகவும் கொண்டு ஒரு பொது சத்துணவு மையத்தை தேர்வு செய்து அதனை சுற்றி 3 கி.மீ.க்குள் அமைந்துள்ள சத்துணவு மையங்கள் விபரத்தினை புள்ளிவிபரமாகவும், ஊராட்சி ஒன்றியத்திற்கான வரை படத்திலும் பொருத்தி அனுப்பிட அறி வுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சத்துணவு மையங்களை குறைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநில துணைத் தலை வர் பே.பேயத்தேவன் தமிழகத்தில் 43 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்க ளில் 1 லட்சத்து 29 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் பணிபுரிந்து வரு கிறார்கள். தமிழக அரசு தற்போது முடி வெடுத்துள்ளபடி 85 ஆயிரம் பணி யிடங்கள் காலியாகும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் முற்றிலும் ஒழிந்துவிடும். சத்துணவு திட்டம் தற்போது உள்ள நிலையே தொடரவேண்டும்” என்று கூறினார்.

;