என்எஸ்எஸ் முகாம்கள் நடத்த கட்டுப்பாடுகள்
சென்னை, செப். 16 - தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக 1953 என்எஸ்எஸ் முகாம்கள் நடைபெற உள்ளன. கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்எஸ்எஸ் முகாமில் பாலி யல் புகார்கள் எழுந்த பின்னணியில், இந்த ஆண்டு என்எஸ்எஸ் முகாம் நடத்துவதற்கு கடும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள் ளன. பெற்றோரின் தடை யின்மை சான்றிதழ் கட்டா யம், மாணவர்களை வெளி யிடங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என ஆசிரி யர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
காவலர்கள் சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சி, செப்.16- கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன் மலை பகுதிக்குட்பட்ட கரியாலூர் காவல்நிலைய தனிப்பிரிவு காவலர்கள் பிரபு, மற்றொரு காவலர் யுவராஜ் ஆகியோர் கைது செய்ய ப்பட்டுள்ளனர். 17 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச் சாட்டில் கைதுசெய்யப்பட்ட இவர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர் உத்தரவிட்டுள்ளார்.