திருச்சிராப்பள்ளி, நவ.25- திருச்சியில் அரசு பல் மருத்துவமனை, ஆயுர்வேதக் கல்லூரி தொடங்க விரை வில் அறிவிப்பு வெளியாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனை வளா கத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தை களுக்கான உணவு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. பூங்கா திறப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது. விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பூங்காவினை திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசுகையில், ‘‘திருச்சியில் செவித்திறன் குன்றிய 82 குழந்தைகளுக்கு சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது அவர்களுக்கான உணர்வு பூங்கா திறக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அரசு பல் மருத்துவமனை மற்றும் ஆயுர்வேதக் கல்லூரி நிதி அறிக்கையில் முதல்வரின் ஆலோசனை பெற்று அறிவிக்கப்படும். ரூ.13 லட்சம் மதிப்பில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேலும் டயாலிசிஸ் சென்டர் கொண்டு வரப்படவுள்ளது. தமிழகத்தில், 708 நகர் நலவாழ்வு மையம் அமைக்க உத்தர விடப்பட்டது.
அதில், அமைச்சர் நேருவின் முயற்சியில், திருச்சியில், 36 நகர் நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். நிகழ்ச்சியில் திருச்சி எம்.பி., திரு நாவுக்கரசர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநக ராட்சி ஆணையர் வைத்திநாதன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக 32 படுக்கைகளுடன் கூடிய இசிஆர்பி-II தீவிர சிகிச்சை பகுதியை பார்வையிட்டு அமைச்சர்கள் ஆய்வு செய்த னர். மேலும் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். அறுவை சிகிச்சைகளை டிஜிட்டல் முறையில் சரி பார்க்கும் தொழில்நுட்பத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.