தாக்குதல்கள் தொடரும் வரை பேச்சுவார்த்தை இல்லை : ஈரான்
டொனால்டு டிரம்ப் நினைத்தால் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாக ஈரான்-இஸ்ரேல் மோதலை முடிவுக்கு கொண்டு வர முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதியின் ஆலோசகர் மஜித் ஃபராஹானி இதனை ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈரான் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த பேச்சு வார்த்தையும் நடத்த முடியாது என அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். நோபல் பரிசு வேண்டும்: டிரம்ப் புலம்பல் அமைதிக்கான நோபல் பரிசை 4 அல்லது 5 முறை நான் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அங்கலாய்த்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என டிரம்ப் 15 முறை பேசியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரும் டிரம்புக்கு அமை திக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்த நிலையில் அவர் இவ்வாறு புலம்பியுள்ளார். சீனாவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்கும் ரஷ்யா சீனாவுடன் அனைத்து வகையான ஒத்துழைப்பையும் வலுப்படுத்த ரஷ்யா உறுதிபூண்டுள்ளது என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். 2024 இல் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் 240 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ள நிலையில், சீனாவின் முக்கிய பொருளாதார கூட்டாளியாக ரஷ்யா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்றும் புடின் தெரிவித்துள்ளார். மேலும் இருநாடுகளும் புதிய முதலீடுகளை மேலும் அதிகரிக்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.