மதுரை, மே 3- புல்டோசருக்கு (மோடிக்கு) தமிழகம்-கேரளத்தில் இடமில்லை2024-தேர்தலில் தமிழகத்தில் பாஜகவிற்கு “முட்டை” உறுதி என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயல் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பின ருமான ஏ.ஏ.ரஹீம் உறுதிபடக் கூறினார். திருச்சிராப்பள்ளியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சைக்கிள் பயண நிறை வாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஏ.ஏ.ரஹீம் பேசியதாவது:- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, பொன்மலை தியாகிகள் மண்ணான திருச்சி ராப்பள்ளியில் நிறைவு செய்திருக்கிறார்கள். எங்களது கோரிக்கை எல்லாம் அனை வருக்கும் வேலை கொடு என்பது தான். எல்ஐசி., ரயில்வே, நிலக்கரி சுரங்கங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு கொடுப்பதன் மூலம் இளை ஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படு கிறது. நவீன தனியார்மய, தாராளமயக் கொள்கை பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தொடங்கியது. அதை முன்னெப் போதும் விட மிகத் தீவிரமாக அமல்படுத்தப் படுகிறது. மக்கள் நலன் சார்ந்த பிரச்சனை களை எதிர்த்துக் குரல் கொடுத்தால் மதக் கலவரத்தை உருவாக்குவது தான் பாஜக வேலை.
முதலில் பாதிக்கப்படுவது
எல்ஐசியில் சுமார் 13 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 23,400 பேர் பழங்குடியின மக்கள், பட்டியலின மக்கள் 46,800 பேர். இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் 84,240 பேர் பணியாற்றுகின்றனர். எல்ஐசி -யை அதானி, அம்பானிகளிடம் மோடி கொடுப்பதன் மூலம் முதலில் பாதிக்கப்படு வது பழங்குடியின மக்களும். பட்டியலின மக்களும் தான். இவர்களின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாப்பது யார். பொதுத்துறை களை தாரை வார்த்து பழங்குடியினர், பட்டி யலின மக்கள், இதர பிற்படுத்தப் பட்டோருக்கு மட்டுமல்ல அரசுப் பணியில் சேர்ந்த அனைவருக்கும் துரோகம் செய்கிறது ஒன்றிய அரசு,. ராமநவமியன்று நடைபெற்ற வன் முறைக்கு பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டமே கார ணம். மோடி ஆட்சி இப்போது “புல்டோசர் ஆட்சி” யாக மாறிவிட்டது. முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடித்துத் தள்ளப்படும். “மோடியின் புல்டோசர்” கர்நாட கம் வரை வந்துவிட்டது.
ஆனால் ஒரு போதும் “மோடியின் புல்டோசர்” கேரளத்திற் குள் நுழைய முடியாது. மத மோதலுக்கு வித்திட முடியாது. ஏனெனில் அங்கிருப்பது பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி. அதற்கு பக்கபலமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளது. கேரளத்தைப் போல தமிழகத்திலும் மோடியின் புல்டோசர் நுழைய முடியாது. தமிழகத்தில் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு இடமில்லை. இங்கு நடப்பது மதச்சார்பின்மையை காக்கும் அரசு. சமீபத்தில் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்று முடிந்தது. அப்போது நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பினராயி விஜயனுடன் செங்கொடிக்கு கீழ் நின்று கை உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இதன் அர்த்தம் என்னவெனில் மாநில உரிமைகளை பறிக்கவிட மாட்டோம். மாநில உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம். மதச்சார்பின்மையை பாதுகாக்கும் நாங்கள் மதவாதிகளுக்கு இடம் தர மாட்டோம்” என்பது தான். சிறுபான்மை மக்கள் அனைவரும் இந்தியாவில் வாழ்வதற்கு உரிமை உள்ளது. அதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது. முஸ்லிம்கள் வாழும் உரிமை ஒன்றும் ஆர்எஸ்எஸ் போட்ட பிச்சையல்ல.
அமித்ஷாவுக்கு உரிமையில்லை
இந்தி, இந்தி என்று அமித்ஷா கூறுகிறார். இரு மொழியில் பேசுபவர்கள் சந்தித்தால் இந்தியில் பேசவேண்டும் என்கிறார். பல ஒன்றியங்களைக் கொண்டது தான் ஒன்றிய அரசு. பல மொழி, பல கலாச்சாரங்களைக் கொண்டது. கேரள மக்களும், தமிழக மக்களும் சந்தித்துக் கொண்டால் எந்த மொழியில் பேசிக்கொள்ளவேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். அவர்களது உரிமையில் தலையிடுவதற்கு அமித்ஷாவிற்கு உரிமையில்லை. தமிழகமும், கேரளமும் எந்தத் தருணத்திலும் தங்களது மொழிக்கொள்கையை விட்டுக்கொடுக்காது. இந்தி பேசுங்கள், இந்தி படியுங்கள் எனக் கூறும் பிரதமர் மோடி இந்தி பேசும் மக்களுக்கு கேஸ், பெட்ரோல், டீசல் ஆகிய வற்றை குறைந்த விலைக்கா தருகிறார்? விலையேற்றம் இந்தியா முழுமைக்கும் பொதுவானது. விலைவாசியைக் குறைக்க வழியில்லாத பாஜக அரசு மொழியின் மூலம் மக்களை பிரிக்க முயல்கிறது. ஏற்கனவே கேரள மக்கள் பாஜக-விற்கு முட்டை (பூஜ்ஜியம்) போட்டுவிட்டார்கள். 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழக மக்கள், மதச்சார்பின்மை யை பாதுகாக்க, மக்கள் சகோதரத்துவ த்துடன் மகிழ்ச்சியாக வாழ பாஜக-விற்கு முட்டையை (பூஜ்ஜியம்) போடுங்கள் என்றார். ஏ.ஏ.ரஹீமின் ஆங்கில உரையை வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் தமிழாக்கம் செய்தார்.
வாலிபர் சங்கம் பற்றவைத்துள்ள நெருப்பு
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் பேசுகையில், “இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைவருக்கும் வேலை கொடு என வலியுறுத்தி 3,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் நடத்தியுள்ளது. மோடி அரசு இரண்டு கோடிப் பேருக்கு வேலை தருகிறேன் என்றார். யாருக்குக் கொடுத்தார்? தமிழகத்தில் தொழில் வாய்ப்பைப் பெருக்க கூடுதல் நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை உருவாக்கி வேலை கொடுப்பது தான் திமுக-அரசின் வேலை. தமிழகத்திற்கு போதுமான நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுப்பதேன்? மோடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒன்றிய அரசுகளின் உரிமையைப் பறிப்பதாகவே உள்ளது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதும், இருக்கிற வேலை வாய்ப்பைப் பாது காப்பதுதான் ஒரு நல்ல அரசின் நடவடிக்கை யாக இருக்க முடியும். அரசு நிறுவனங் களையும், பொதுத்துறை நிறுவனங்களை யும் கார்ப்பரேட்டுகளிடம் விற்பது ஒரு நல்ல அரசிற்கு அழகல்ல. இன்றைக்கு “நகர்மயமாதல் அதிகரித்து வருகிறது” இதைக் கூட மோடி தனது சாதனை என்கிறார்.
நகர் மயமாதல் என்பது ஆபத்தானது. இதற்குக் காரணம் விவசா யத்திற்கு கட்டுப்படியான விலை கிடைக்கா தது தான். விவசாயத்திற்கு சலுகைகள் மறுக்கப்படுவதால் கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி வருகிறார்கள். கிராம மக்கள் நகரத்திற்கு வந்தால் என்ன வாகும்? விவசாயம் பாதிக்கப்பட்டு விளை பொருட்களுக்கும் நாம் கார்ப்பரேட்டுகளை எதிர்பார்க்க வேண்டியதிருக்கும். கோயம்புத்தூர்-திருப்பூர்-சென்னை போன்ற நகரங்களில் சிறு-குறு-நடுத்தர தொழில்களை தரை மட்டமாக்கி அந்த இடத்தில் கார்ப்பரேட்டுகள் கட்டடம் கட்ட மோடி அரசு அனுமதிக்கிறது. அரசியல் பொருளாதாரம் பற்றி முழுமையாக மோடி அரசு தெரிந்து கொள்ள வில்லை. காலிப்பணியிடங்களை நிரப்ப மறுக்கும், புதிய பணியிடங்களை உரு வாக்க மறுக்கும் மோடி அரசை வீதியில் நிறுத்த வேண்டும். “வேலை கொடு” என்ற ஒற்றை கோரிக்கை யை (நெருப்பை) இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் தமிழகத்தில் முன்வைத்துள்ளது (பற்ற வைத்துள்ளது). இது இந்தியா முழுவதும் பற்றியெரியும். இவ்வாறு அவர் பேசினார்.