தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை
சென்னை, ஆக. 20 - தமிழ்நாட்டில், திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். திருச்சியில் அப்சல் கான் என்பவரது வீடு, திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் ஜின்னா நகர் பகுதியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீடு, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த யூசிப் வீடு மற்றும் கொடைக்கானல், நிலக்கோட்டையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பாஸ்டேக் சந்தா முன்னிலையில் தமிழ்நாடு
புதுதில்லி, ஆக. 20 - 4 நாட்களில் ஆண்டு பாஸ்டேக் சந்தா திட்டத்தில் இணைவோரின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. ரூ. 3,000 செலுத்தி பாஸ்டேக் சந்தா பெறும் திட்டம் ஆகஸ்ட் 15-இல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி நாடு முழுவதும் 4 நாட்களில் 5 லட்சம் பேர் இணைந்துள்ள னர்; இதில், அதிகபட்சமாக 1.50 லட்சம் பேருடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஒரு லட்சம் சந்தாதாரர்களுடன் கர்நாடகம் 2-ஆவது இடம், ஹரியானா 3-வது இடத்திலும் உள்ளன.