tamilnadu

img

கோழிகமுத்தி மலைவாழ் மக்களுக்கு புதிய வீடுகள்

கோழிகமுத்தி மலைவாழ் மக்களுக்கு புதிய வீடுகள்

கோவை, ஆக.23- ஆனைமலை புலிகள்  காப்பகத்தில் கோழிகமுத்தி  மலைவாழ் மக்களுக்காக கட் டப்பட்ட புதிய வீடுகளை வனத்துறை தலைமைச் செயலர் நேரில் ஆய்வு மேற் கொண்டார். கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப் பகத்திற்குட்பட்ட உலாந்தி  வனச்சரகத்தில், டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள  எருமைப்பாறை, கூமாட்டி மற்றும் கோழிக முத்தி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மலை வாழ் மக்களுக்காக புதிய வீடுகள் கட்டும்  பணி முதற்கட்டமாக முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வனத்துறை தலை மைச் செயலர் சுப்ரியாசாகு சனியன்று இப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மலைவாழ் மக்கள் மேம்பாட்டு நிதியின்  கீழ் ரூ.4,95,000 மற்றும் தாட்கோ மூலம்  ரூ.5,11,000 நிதியுதவியுடன், 302 சதுர அடி பரப் பளவில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதியில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட  குடும்பங்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 2024 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்ட இந்த வீட்டு வசதித் திட்டம்  மலைவாழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சு. சுப்பிரமணியம், டாப்ஸ்லிப் பகுதியில்  மருத்துவமனை ஆய்வுக்காகச் சென்ற போது, மலைவாழ் மக்கள் தங்கள் கோரிக் கைகளை முன்வைத்தனர். வீடு கட்டும் பணி களை விரைவாக முடிக்க வேண்டும், மின் இணைப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி களை ஏற்படுத்தித் தர வேண்டும் என அவர் கள் வலியுறுத்தினர். இதனை ஏற்று, அமைச் சர் உடனடியாக வனச்சரக அதிகாரிகளுக்கு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இதன் பயனாக, கோழிகமுத்தி பகுதியில் யானை மாவுத்களுக்காக கட்டப்பட்டு வந்த  குடியிருப்புகள் முதற்கட்டமாக முழுமைய டைந்தன. இந்த வீடுகளை வனத்துறை தலை மைச் செயலர் சுப்ரியா சாகு ஆய்வு செய்து,  பணிகளின் தரத்தை உறுதி செய்தார். விரை வில் இந்தக் குடியிருப்புகள் மலைவாழ்  மக்களின் குடும்பங்களுக்கு ஒப்படைக்கப் படும். மேலும், துணை முதல்வரின் வருகை யும் எதிர்பார்க்கப்படுகிறது.