tamilnadu

img

செப்.22 முதல் புதிய ஜிஎஸ்டி விகிதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

செப்.22 முதல்  புதிய ஜிஎஸ்டி விகிதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதுதில்லி, செப். 18 -
ஜிஎஸ்டி வரி விகிதம், 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம் என 4 அடுக்குகளாக இருந்த நிலையில், அது தற்போது, 5 மற்றும் 18 சதவிகிதம் என 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவிகித சிறப்பு வரி விகிதமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி புதிய விகித அறிவிப்பை ஒன்றிய நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதைப் பின்பற்றி, மாநில ஜிஎஸ்டிக்கான விகிதங்களை அந்தந்த மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை முதல் 2 அடுக்கு வரி விகிதங்கள் கொண்ட ஜிஎஸ்டி நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.