tamilnadu

img

சிபிஎம் மாமன்ற உறுப்பினர் முயற்சியில் புதிய நியாய விலை கடை திறப்பு

சிபிஎம் மாமன்ற உறுப்பினர் முயற்சியில்  புதிய நியாய விலை கடை திறப்பு

கும்பகோணம், செப். 16-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் தாராசுரம் மண்டலம் 3, வார்டு 34 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினராக அ. செல்வம் தேர்வு செய்யப்பட்டு மக்களின் குறைகளை அன்றாடம் சந்தித்து பொதுமக்களின் அடிப்படை வசதிகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்.  இந்நிலையில், 34 ஆவது வார்டுக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோவில் தெருவில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.   தாராசுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் சுப தமிழழகன், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், மண்டலக் குழு தலைவர் ரா.அசோக்குமார், 34 ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் அ. செல்வம், சாகுல் ஹமீது, முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.